Enable Javscript for better performance
புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க தீவிர நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க தீவிர நடவடிக்கை

    By DIN  |   Published on : 01st June 2019 09:57 AM  |   அ+அ அ-   |    |  

    காரைக்காலில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்ட முடிவு செய்துள்ளது.
    காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வண்ணமயமான பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளின் அருகே உள்ள கடைகளில் இதன் விற்பனை அமோகமாக உள்ளது.
    திருச்சி உள்ளிட்ட பிற நகரங்களில் இருந்து புகையிலைப் பொருள்களை மொத்தமாக வரவழைத்து காரைக்காலில் பலர் விற்பனையாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் குறித்த விவரம் காவல்துறை உள்ளிட்ட அரசு நிர்வாகத்தினருக்குத் தெரிந்திருந்தும், எந்தவித தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை.
    இளைஞர்கள், மாணவர் சமுதாயம் சீர்கேடு அடைவதாக பல்வேறு தரப்பினர் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், புதுச்சேரி உணவுப் பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன், காரைக்கால் நகராட்சி ஆணையர் எஸ்.சுபாஷ் ஆகியோர் கடந்த 2 நாள்களுக்கு முன் காரைக்கால் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நிரவி அருகே ஹைவே நகரில் ஒரு வீட்டில் திடீர் சோதனை செய்தனர். அப்போது ரவி என்பவர் குடும்பத்துடன் வசிக்கும் ஒரு வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் மூட்டைகளைப் பறிமுதல் செய்தனர்.
    காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்தால் சிறிய அபராதம் போன்ற மென்மையானப் போக்கைக் கையாண்டு குற்றவாளியை விடுவித்து விடுகிறதாம். உணவுப் பாதுகாப்புத் துறையினர் நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் சட்ட நடவடிக்கை, அதிகபட்ச அபராதம் விதிக்க முடிகிறதாம். எனவே உணவு பாதுகாப்புத்துறையினர் ஹைவே நகரில் மேற்கொண்ட நடவடிக்கை, பல்வேறு தரப்பினரால் வரவேற்பு தெரிவிக்கப்படுகிறது.
    காரைக்கால் மாவட்ட நிர்வாகம், காரைக்கால் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனையைத் தடுக்க சிறப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா வெள்ளிக்கிழமை கூறும்போது,  மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையை முழுமையாகக் கட்டுப்படுத்த சில அதிரடி திட்டங்களைச் செயல்படுத்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. நடவடிக்கைகள் தொடங்கிய பின்னர் விரிவாக இது
    குறித்து தெரிவிக்கப்படும் என்றார்.உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ரவிச்சந்திரன் கூறும்போது, ஹைவே நகரில் ரவி என்பவர் வசிக்கும் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களைக்கொண்டு, சம்பந்தப்பட்டவருக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கவும் துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை அடுத்த சில நாள்களில் மேற்கொள்ளப்படும் என்றார்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp