ஐ.ஓ.பி. வாடிக்கையாளர் குடும்பத்துக்கு விபத்து காப்பீட்டு நிதியளிப்பு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாடிக்கையாளர் குடும்பத்தினருக்கு விபத்து காப்பீட்டுத் தொகையை வங்கியாளர்கள் புதன்கிழமை வழங்கினர்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாடிக்கையாளர் குடும்பத்தினருக்கு விபத்து காப்பீட்டுத் தொகையை வங்கியாளர்கள் புதன்கிழமை வழங்கினர்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஐ.ஓ.பி. சுரக்ஷா திட்டம் மற்றும் யுனிவர்சல் சோம்போ ஜெனரல் காப்பீட்டுத் திட்டம் ஆகியவை உள்ளன. இந்த திட்டத்தின்கீழ் விபத்து காப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்ச்சி வங்கி கிளை வளாகத்தில் நடைபெற்றது. கிளை மேலாளர் விஷாக் தத் தலைமை வகித்தார்.
வங்கிக் கிளையின் வாடிக்கையாளராக இருந்த நிரவி பகுதியைச் சேர்ந்த ஒருவர் விபத்தில் உயிரிழந்ததையொட்டி அவரது குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சத்துக்கான காப்பீட்டுத் தொகைக்கான காசோலையை வங்கி மேலாளர் வழங்கினார். இந்தத் திட்டம் குறித்து வங்கி அதிகாரி கூறும்போது, ஐ.ஓ.பி. சுரக்ஷா திட்டத்தில் ஆண்டு சந்தா தொகை ரூ.118 செலுத்தினால் ரூ.5 லட்சமும், ரூ.236 செலுத்தனால் ரூ.10 லட்சமும் விபத்துக் காப்பீட்டுத் தொகையாக பெறமுடியும். இந்தத் திட்டத்தில் 18 முதல் 70 வயது வரை உள்ள வாடிக்கையாளர்கள் சேர்ந்துகொள்ளலாம். எனவே ஐ.ஓ.பி.  சிறந்த சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. எனவே, இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம் எனக் கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் திருநள்ளாறு, திருப்பட்டினம், நெடுங்காடு கிளை மேலாளர்கள், புதுச்சேரி மண்டல மேலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். புதுச்சேரி மண்டல உதவி மேலாளர் பத்மநாபன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com