சீதளாதேவி அம்மன் கோயிலில் தீமிதி உத்ஸவம்

காரைக்கால் அருகே சீதளாதேவி அம்மன் கோயிலில் தீமிதி உத்ஸவம் திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

காரைக்கால் அருகே சீதளாதேவி அம்மன் கோயிலில் தீமிதி உத்ஸவம் திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
கீழகாசாக்குடியில் உள்ள சீதளாதேவி அம்மன் கோயில் வருடாந்திர தீமிதி உத்ஸவம் கடந்த 7-ஆம் தேதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, கரகம் எடுத்துவரும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
தினமும் பகல் நேரத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவு அம்மன் வீதியுலாவும் நடைபெற்று வந்தது.  கோயிலில் திருவிளக்கு வழிபாடும்,  கஞ்சி வார்த்தலும் முக்கிய நிகழ்ச்சிகளாக நடத்தப்பட்டன. தீமிதி நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. பகல் 1 மணியளவில் தீமிதிக்கும் பக்தர்களுக்கு கங்கணம் கட்டப்பட்டது. மாலை 5 மணியளவில் அம்மன் அன்ன வாகனத்தில் வீதியுலா எழுந்தருளுச் செய்யப்பட்டது.  கரகம் மற்றும் தீமிதிக்க கங்கணம் கட்டிக்கொண்ட பக்தர்கள் ஊர்வலத்தில் சென்றனர். ஊர்வல நிறைவில் அம்மன் தீக்குழி அருகே எழுந்தருளச் செய்யப்பட்டார்.
அம்மனுக்கு நடந்த தீபாராதனையைத் தொடர்ந்து ஆண்கள், பெண்கள்,  குழந்தைகளை சுமந்துகொண்டும் பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினர் பி.ஆர்.என்.திருமுருகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள்  மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.  செவ்வாய்க்கிழமை காலை மஞ்சள் நீர் விளையாட்டு விழா நடத்தப்பட்டது.   
வேர்க்கொல்லை மாரியம்மன் கோயில் உத்ஸவம்: இதேபோல், திருமலைராயன்பட்டினம் பகுதி போலகத்தில் உள்ள வேர்க்கொல்லை மாரியம்மன் கோயிலில் தீமிதி நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தீமிதித்து வழிபாடு செய்தனர். உத்ஸவ அம்மன் வீதியுலா நடைபெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com