தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ரூ.1 கட்டணப் பேருந்து சேவை

அரசு தொடக்கப்பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவ, மாணவியர் வசதிக்காக ரூ.1 கட்டணம் செலுத்திச் செல்லும் கூடுதல் பேருந்தை மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமை இயக்கி வைத்தார்.

அரசு தொடக்கப்பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவ, மாணவியர் வசதிக்காக ரூ.1 கட்டணம் செலுத்திச் செல்லும் கூடுதல் பேருந்தை மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமை இயக்கி வைத்தார்.
காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் வசதிக்காக மாணவர் சிறப்புப் பேருந்துகள் புதுச்சேரி அரசால் இயக்கப்படுகின்றன. ரூ.1 கட்டணத்தில் இந்த பேருந்து இயக்கப்படுகிறது. இதுவரை 14 பேருந்துகள் இயக்கத்தில் உள்ள நிலையில், கோட்டுச்சேரி கொம்யூன், கோட்டுச்சேரிபேட் அரசு தொடக்கப்பள்ளியில் நிகழாண்டு 60 மாணவர்கள் புதிதாக சேர்ந்ததையொட்டி, மாணவர்களின் இருப்பிடப் பகுதி வழியே பள்ளிக்குப் பேருந்து இயக்க வேண்டுமென பெற்றோர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து புதுச்சேரி வேளாண் மற்றும் கல்வி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் கல்வித்துறை மற்றும் போக்குவரத்துத்துறையினர் நடவடிக்கை எடுத்து, பேருந்து கூடுதலாக இயக்குமாறு அறிவுறுத்தினார்.  அமைச்சரின் ஆலோசனையின்பேரில் கூடுதலாக ஒரு பேருந்தை கொன்னக்காவலி முதல் நிரவி பகுதி ஊழியப்பத்து வரை செல்லும் புதிய மார்க்கத்தில் திங்கள்கிழமை இயக்கப்பட்டது. இந்த பேருந்தை மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். முதன்மைக் கல்வி அதிகாரி அ.அல்லி, வட்ட துணை ஆய்வாளர் கார்த்திசேகன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். கல்வித்துறையினர் இதுகுறித்து கூறும்போது, இந்த பேருந்து குறிப்பாக கோட்டுச்சேரி பேட் அரசு தொடக்கப்பள்ளியில் 60 மாணவர்கள் புதிதாக சேர்ந்ததைக் கருத்தில்கொண்டு, கல்வி அமைச்சரின் ஆலோசனையின்பேரில் இயக்கப்படுகிறது. கொன்னக்காவலி முதல் ஊழியப்பத்து வரை செல்லும் மாணவர்கள் இதனால் பயனடைவர்.  மாணவியருக்காக மட்டும் இயக்குவதற்கு கூடுலாக 2 பேருந்துகளுக்கான அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் உரிய மார்க்கத்தில் இயக்கப்படும். சிறப்புப் பேருந்துகள் அனைத்தையும் மாணவர்கள் முழுமையாக பயன்படுத்துகின்றனர். மாணவர் சிறப்புப் பேருந்து இயக்கும் தனியார் பேருந்து நிர்வாகத்தினருக்கு கல்வித்துறையானது அதற்கான தொகையை அளிக்கிறது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com