நெடுங்காடு பகுதியில் சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணி

நெடுங்காடு கிராமப்  பஞ்சாயத்து பகுதிகளில்  தண்ணீர் சேமிப்பு,  மரக்கன்று நடும் விழிப்புணர்வு பணிகள் சனிக்கிழமை நடைபெற்றன. 

நெடுங்காடு கிராமப்  பஞ்சாயத்து பகுதிகளில்  தண்ணீர் சேமிப்பு,  மரக்கன்று நடும் விழிப்புணர்வு பணிகள் சனிக்கிழமை நடைபெற்றன. 
மழைநீர் சேமிப்பு, நீர் நிலை பகுதிகளில் மரக்கன்று  நட்டு சுற்றுச்சூழலை மேம்பாடு அடையச் செய்தல் உள்ளிட்ட பணிகள் உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம்  சிரமதானப் பணியாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 27 கிராமப் பஞ்சாயத்துப் பகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்றது. நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்துக்குள்பட்ட பெரியகுளம், நல்லாத்தூர் கோயிலடி குளம், புத்தக்குடி வடக்கத்தி குளம் மற்றும் வடமட்டம் சாலை திருவேங்கடபுரம் பாய்வாய்க்கால் ஆகியவற்றை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீர் நிலையோரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் க.காளிதாஸ் என்கிற காமாட்சிசுந்தரம் தலைமையில் பஞ்சாயத்து ஊழியர்கள், கிராமவாசிகள், இளைஞர் நற்பணி மன்றத்தினர், தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்கள் ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டனர். பணிகளை மாவட்ட துணை ஆட்சியரும், உள்ளாட்சித் துறை துணை இயக்குநருமான எஸ்.பாஸ்கரன் பார்வையிட்டு பஞ்சாயத்து நிர்வாகத்தின் பணிகளைப் பாராட்டினார். பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பு முறை, தண்ணீர் வரும் காலங்களில் நீர்நிலைகளில் சேமித்து வைக்கும் முறை, மரக்கன்று நட்டு பராமரிக்கும் முறையால் ஏற்படும் பயன்கள் குறித்து பஞ்சாயத்து நிர்வாகத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com