சுடச்சுட

  

  காரைக்கால் புனித சவேரியார் ஆண்டுத்  திருவிழா மின் அலங்காரத் தேர் பவனி திங்கள்கிழமை நடைபெற்றது.
  காரைக்கால் காமராஜர் சாலை ஞானப் பிரகாசர் வீதியில் புனித சவேரியார் ஆலயம் உள்ளது.  இங்கு வருடாந்திர திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் மாலை வேளையில் திருப்பலி நடத்தப்பட்டது. நிறைவு நிகழ்ச்சியாக திங்கள்கிழமை மாலை 6.30 மணியளவில் காரைக்கால் பங்குத் தந்தை அருட்திரு டி.எஸ். அந்தோணிராஜ் பங்கேற்புடன் பாடற் திருப்பலி  நடத்தப்பட்டது. தேவ நற்கருணை ஆசியுடன் இரவு மின் அலங்கார ரதத்தில் புனித சவேரியார் ரதம் புறப்பாடு தொடங்கியது.  இந்த நிகழ்ச்சியில் காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா, முன்னாள் அமைச்சர் ஏ.வி.சுப்பிரமணியன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். முக்கிய வீதிகளில் ரதம் சென்றுவிட்டு ஆலயத்தை சென்றடைந்தது. ரதத்தின் முன்பாக ஏராளமான மக்கள் ஜெபம் செய்தவாறு சென்றனர்.
  கொடியிறக்கம் :  செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணியளவில் திருப்பலி நடத்தப்பட்டு கொடியிறக்கம் செய்யப்பட்டது.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புனித  சவேரியார் ஆலய நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai