மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, காரைக்காலில் மாணவர்களுக்கு எழுதுபொருள்கள், இனிப்பு உள்ளிட்டவற்றை திமுகவினர் வழங்கினர்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, காரைக்காலில் மாணவர்களுக்கு எழுதுபொருள்கள், இனிப்பு உள்ளிட்டவற்றை திமுகவினர் வழங்கினர்.
மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, காரைக்கால் மாவட்ட திமுக சார்பில் வெள்ளிக்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்ட்டன. திமுக இலக்கிய அணி சார்பில் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம் தலைமையில் காரைக்கால் கோத்துக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்ளுக்கு நோட்டு, பேனா, பென்சில் உள்ளிட்ட எழுதுபொருள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், திமுக இலக்கிய அணி அமைப்பாளர் அமுதா ஆர்.ஆறுமுகம், துணை அமைப்பாளர்கள் கம்பதாசன், வேலுமணி, சீனிவாசன், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும், காரைக்கால் திமுக பொருளாளர் கே.டி.வி.சங்கர், வடக்குத் தொகுதி செயலர் ஜி.ராஜ்மோகன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து, சப்தஸ்வரம் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிரவி -திருப்பட்டினம் தொகுதியில் சட்டப் பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன் தலைமையில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com