நலிந்த பிரிவினர் தொழில்  தொடங்க உபகரணங்கள்

காரைக்காலில் நலிந்த பிரிவினர் தொழில் தொடங்க தேவையான உபகரணங்கள் சமூக நலத் துறை சார்பில் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

காரைக்காலில் நலிந்த பிரிவினர் தொழில் தொடங்க தேவையான உபகரணங்கள் சமூக நலத் துறை சார்பில் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
புதுச்சேரி அரசின் சமூக நலத் துறை சார்பில், நலிந்த பிரிவினர் சுய தொழில் செய்ய ஏதுவாக இசைக் கலைஞர்களுக்கு நாகசுரம், தவில் மற்றும் முடிதிருத்தம் தொழில் செய்யவுள்ளோருக்கு அதற்கான சுழழும் நாற்காலி மற்றும் சலவைத் தொழிலாளர்களுக்கு சலவைப் பெட்டி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் இந்த திட்ட உதவியை பெற சமூக நலத் துறையில் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், முதல்கட்டமாக 5 தொகுதிகளிலும் சில பயனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த தொகுதிகளில் நடைபெற்றன. திருநள்ளாறு தொகுதியில் பயனாளிகளுக்கு தொழில் உபகரணங்களை வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் வழங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற சமூக நலத் துறை உதவி இயக்குநர் (பொ) காஞ்சனா கூறும்போது, "காரைக்காலில்  6 பேருக்கு சலவைப் பெட்டி, 6 பேருக்கு முடிதிருத்தம் செய்ய பயன்படும் நாற்காலி, 6 பேருக்கு நாகசுரம், 10 பேருக்கு தவில் வழங்கப்பட்டன' என்றார்.
இதேபோல், நிரவி-திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன், காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா, காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.என்.திருமுருகன், நெடுங்காடு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் சந்திர பிரியங்கா ஆகியோர் அவரவர் தொகுதி பயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com