"வாழ்வில் வெற்றி பெற தன்னம்பிக்கை, உறுதியான முயற்சி தேவை'

வாழ்வில் வெற்றி பெறுவதற்கு தன்னம்பிக்கையும், உறுதியான முயற்சியும் தேவை என காவல்துறை அதிகாரி

வாழ்வில் வெற்றி பெறுவதற்கு தன்னம்பிக்கையும், உறுதியான முயற்சியும் தேவை என காவல்துறை அதிகாரி அறிவுறுத்தினார்.
காரைக்கால் மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியில், கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு சார்பில், மாணவியருக்கான ஊக்குவிப்பு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால், இந்திய கடலோரக் காவல்படை காரைக்கால் மைய கமாண்டன்ட்  எஸ்.ஆர். நாகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாணவியரிடையே ராகுல் அல்வால் பேசுகையில், வாழ்வில் வெற்றியடைய முதலில் இலக்கு இருக்க வேண்டும். அதை அடைவதற்கு தன்னம்பிக்கையும், சீரிய முயற்சியும் அவசியமாகும். உலகளவிலும், இந்தியாவிலும் எத்தனையோ மகளிர் துறைவாரியாக சாதனை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர். இவர்களது வாழ்க்கை நிலையையும், முயற்சிகளையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். கல்வி கற்கும்போது பல சிரமங்களை சந்திக்கிறோமே என்ற சிந்தனையை மனதில் கொண்டிருக்காமல், வெற்றி ஒன்றே லட்சியம் என்ற போக்கில் நம்மை மாற்றிக் கொண்டு முயற்சித்தால், வெற்றி வசப்படும் என்றார் அவர்.
கடலோரக் காவல்படை கமாண்டன்ட் எஸ்.ஆர். நாகேந்திரன் பேசும்போது, வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய ஆசைப்படுவோருக்கு ஏராளமான தடைகள் ஏற்படுவது இயல்பு. இவைகளை தகர்த்தெறிந்து முன்னேறுவதுதான் மனிதனின் சாதனையாகும். முந்தைய காலங்களைக் காட்டிலும் தற்போது மகளிரிடையே உறுதியும், உயர்ந்த நிலையை அடையும் எண்ணமும் அதிகமாக வளர்ந்துள்ளது. பள்ளி, கல்லூரி அளவிலான மாணவ, மாணவியரிடம் இந்த உறுதி நிலைத்திருக்கவும், உயர்ந்தோர் குறித்த விவரங்களை அறிந்து கொள்வதிலும் ஆர்வம் இருக்க வேண்டும் என்றார்.
மேலும், கடலோரக் காவல்படை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மகளிருக்கான வேலைவாய்ப்புகள் குறித்தும், இதுகுறித்த தேடுதலும், புரிதலும் மாணவ, மாணவியருக்கு அந்த பருவதிலேயே இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
காரைக்கால் அரசு உதவிபெறும் பள்ளிகளின் பெற்றோர் சங்கத் தலைவர் அ.வின்சென்ட், செயலர் கே.ரவிச்சந்திரன் ஆகியோரும் பேசினர். கல்லூரி முதல்வர் ஆர்.பாபு அசோக் வரவேற்றார். கல்லூரி பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அதிகாரி எஸ்.எல்.டெல்காஸ் நன்றி கூறினார். விரிவுரையாளர்கள், மாணவியர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின்போது, பெங்களூருவில் நடந்த தேசிய ஒருமைப்பாட்டு முகாமில் பங்கேற்ற மாணவியருக்கு சான்றிதழை சிறப்பு விருந்தினர்கள் வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com