Enable Javscript for better performance
கடற்கரை சீகல்ஸ் மதுக் கடையை திறக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    கடற்கரை சீகல்ஸ் மதுக் கடையை திறக்க வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 11th March 2019 01:07 AM  |   அ+அ அ-   |    |  


    காரைக்கால் கடற்கரையில் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சீகல்ஸ் மதுபானக் கடையை முடக்கி வைக்காமல் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்குமாறு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். 
    காரைக்கால் கடற்கரையில் புதுச்சேரி அரசு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு சொந்தமான சீகல்ஸ் உணவகம், மதுபான விற்பனையகம் உள்ளன. கடற்கரையையொட்டி உள்ள மதுபானக் கடையால் சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், கடந்த ஜனவரி மாதம் துணை ஆட்சியர் உத்தரவின்பேரில், சீகல்ஸ் மதுமான விற்பனையகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து, சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டுக்குழு சார்பில் அதன் செயலர் டி. அண்ணாதுரை புதுச்சேரி அரசுக்கு விடுத்த கோரிக்கை மனு விவரம்:
    சீகல்ஸ் மதுபானக் கடை சீல் வைக்கப்பட்டதால், அதில் பணியாற்றும் ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. உரிமத்துக்கான ரூ.6 லட்சம் தொகையும் கலால்துறைக்கு செலுத்தப்பட்டுவிட்டது. ஆனால், இந்த மதுபான விற்பனையகத்தால் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்படுவதாகவும், திறக்க வாய்ப்பில்லை எனவும் ஆட்சியர் கூறிவிட்டார்.
    கடற்கரையின் 500 மீட்டர் சுற்றளவுக்குள் தனியார் மதுபானக் கடைகள் உள்ளன. இப்படி இருக்கும்போது,  சீகல்ஸ் மதுபானக் கடையினால் மட்டும் சட்டம்- ஒழுங்கு சீர்கெடும் என்பதை ஏற்கமுடியாது. இதனை திறக்க சுற்றுலாத்துறை அமைச்சர், சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர் தலையிட்டு ஏற்பாடு செய்ய வேண்டும். கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தனியார் மதுபானக் கடைக்கு சென்று மதுப்புட்டிகளை வாங்கிச் செல்கின்றனர். அரசு நிறுவனம் செயல்பட்டால் இதன்மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் பெருகும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா கூறுகையில், கடற்கரையில் உள்ள சீகல்ஸ் மதுபானக் கடை கடற்கரையையொட்டி பொதுமக்கள் நடந்து செல்லும் நடைமேடை, சிறுவர் பூங்கா ஆகிய பகுதிகளின் அருகில் அமைந்துள்ளது. இதனால், இரவு நேரத்தில் மதுப் பிரியர்களால் பல்வேறு சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளதாக பெண்கள் புகார் கூறுகின்றனர். இதன் காரணமாக இந்த பகுதியில் சட்டம்- ஒழுங்கு பாதிப்பும் ஏற்படும் வாய்ப்பு உருவாகிறது. தனியார் மதுபான நிறுவனங்கள் சற்று தொலைவில் அமைந்திருக்கின்றன. ஆனால் சீகல்ஸ் நிறுவனம் அப்படி இல்லை. 
    எனவே காவல்துறையினரை அழைத்து இதுகுறித்து விரிவாக பேச வேண்டியுள்ளது. சீகல்ஸ் மதுபானக் கடையை வேறு இடத்தில் மாற்றுவது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது. விரைவில் இது செயல்படும் சூழல் உருவாகும் என்றார் ஆட்சியர்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    BOOK_FAIR
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp