Enable Javscript for better performance
திருநள்ளாறில் பாமகவினர் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    திருநள்ளாறில் பாமகவினர் சாலை மறியல்

    By DIN  |   Published on : 11th March 2019 01:08 AM  |   அ+அ அ-   |    |  


    திருநள்ளாறில் காவல்துறையைக் கண்டித்து பாமகவினர் சனிக்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்தவர் க. தேவமணி. காரைக்கால் மாவட்ட பாமக செயலாளரான இவர், தன் வசமிருந்த நிலத்தைக் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த தவமணி என்பவர் பயன்படுத்திக் கொள்ள வழங்கியதாகக் கூறப்படுகிறது.
    இந்த இடத்தில் கொட்டகை அமைத்து தவமணி குடும்பத்தினர் உணவகம் நடத்தி வருகின்றனர். தவமணி, அவரது மகன் மணிமாறன் ஆகியோர் பாமகவில் இருந்ததாகவும், பின்னர் அதிலிருந்து விலகிவிட்டதாகவும் தெரிகிறது.
    இதனால் தேவமணிக்கும், தவமணி குடும்பத்தினருக்கும்  கருத்து வேறுபாடு ஏற்பட்டதையொட்டி,  தான் வழங்கிய நிலத்தை ஒப்படைக்குமாறு தேவமணி கோரியுள்ளார். நிலத்தை ஒப்படைக்க தவமணி மறுப்பு தெரிவித்துவந்த நிலையில், இருதரப்பினருக்கும் பிரச்னை எழுந்தது.
    மேலும், தேவமணி மற்றும் அவரின் ஆதரவாளர்கள் சனிக்கிழமை தவமணி கடைக்குச் சென்று, இடத்தைக் காலி செய்யுமாறு கோரினர். இதனால் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இருதரப்பினரும் திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல், பாரபட்சமாக நடப்பதாகக் கூறி தேவமணி தனது ஆதரவாளர்களுடன் திருநள்ளாறில் சனிக்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். 
    காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, துணை ஆட்சியரை சந்தித்துப் பேசலாமென கூறியதன்பேரில் போராட்டத்தை விலக்கிக்கொண்டனர். திருநள்ளாறு- காரைக்கால் சாலையில் நடந்த மறியலால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பாமக மாவட்டச் செயலாளர் தேவமணி உள்ளிட்ட 30 பேர் மீது  போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். 
    இந்நிலையில் காரைக்காலில் வட்டாட்சியர் பொய்யாதமூர்த்தி தலைமையில், இருதரப்பினருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. மண்டல காவல் கண்காணிப்பாளர் வீரவல்லவன், காவல் ஆய்வாளர்கள் பாலமுருகன், சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். இரு தரப்பினரிடமும் இடத்துக்குரிய ஆவணங்கள் இல்லை. எனவே, துணை ஆட்சியரிடம் உரிய ஆவணத்தை ஒப்படைக்கும் வரை  அந்த இடத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது என வட்டாட்சியர் அறிவுறுத்தினார்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp