சுடச்சுட

  


  காரைக்கால் சுகாதார பட்டமேற்படிப்பு மையத்தில் நுகர்வோர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  உலக நுகர்வோர் தினத்தையொட்டி தமிழ்நாடு, புதுச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு காரைக்கால் கிளை சார்பில், காரைக்காலில் உள்ள அன்னை தெரஸா சுகாதார பட்டமேற்படிப்பு மையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மையத்தின் மாணவ, மாணவியரிடையே காரைக்கால் மாவட்டச் செயலாளர்கள் சிவக்குமார், வைஜெயந்திராஜன் ஆகியோர் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து உரையாற்றினர்.
  நுகர்வோர் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம், நுகர்வோர் எந்தெந்த வகையில் விழிப்புணர்வுடன்  இருக்க வேண்டும், பொருள்கள் வாங்கும்போது அதன் தரத்தையும், உற்பத்தி பாக்கிங் செய்த நாள், காலாவதியாகும் தேதி உள்ளிட்டவற்றை பார்த்து வாங்க வேண்டியது குறித்தும், பொருள்கள் வாங்கும்போது நிறுவனத்தில் கண்டிப்பாக ரசீது பெற வேண்டும் எனவும், இதன் மூலமே தவறு கண்டுபிடிக்கப்பட்டால் நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியும் என்ற பல்வேறு விழிப்புணர்வு கருத்துகளை விளக்கிக் கூறினர். நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து மாணவ, மாணவியரிடையே விநாடி- வினா போட்டி நடத்தப்பட்டது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜே. ஜெயபாரதி பரிசுகளை வழங்கினார்.  கோட்டுச்சேரி செயலர் சுமதி, சசிகலா, இசபெல்லா, செல்வி, பார்வதி, கனகவள்ளி, சந்தானலட்சுமி, மாதவன் உள்ளிட்டோரும், திருநள்ளாறு தொகுதி துணைச் செயலாளர்களான செந்தில் குமார், சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai