சுடச்சுட

  

  தட்சணமுத்து மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு வழிபாடு

  By DIN  |   Published on : 17th March 2019 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  காரைக்காலில் தட்சணமுத்து மாரியம்மன் கோயில் முளைப்பாலிகைத் திருவிழாவையொட்டி, திருவிளக்கு வழிபாடு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
  காரைக்கால் நகரப் பகுதியில் தட்சணமுத்து மாரியம்மன், நடனகாளியம்மன், பத்ரகாளியம்மன், படை பத்ரகாளியம்மன் ஆகியவை ஒரே தலமாக கோயில்கொண்டு அருள்பாலிக்கின்றன. இக்கோயில் தட்சணமுத்து மாரியம்மன் கோயில் என்றழைக்கப்படுகிறது. இக்கோயிலில் முளைப்பாலிகைத் திருவிழா ஒவ்வோர் ஆண்டும் வெகு  விமரிசையாக  நடத்தப்படுகிறது. நிகழாண்டு திருவிழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ஆம் தேதி சிறுவர் காவடி ஊர்வலம் நடைபெற்றது. 12-ஆம் தேதி இரவு சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
  வெள்ளிக்கிழமை இரவு திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. கோயில் வாயிலில் அமைக்கப்பட்ட நீண்ட பந்தலின் கீழ் ஏராளமான பக்தர்கள் இந்த வழிபாட்டில் பங்கேற்றனர். வழிபாடு நிறைவில் அம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டு பிரசாதங்கள் விநியோகிக்கப்பட்டன. சனிக்கிழமை இரவு தீச்சட்டி ஊர்வலம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் அம்மன் அக்னி வடிவில் ஊர்வலமாக வருவதான நம்பிக்கையில் பக்தியுடன் வழிபாடு  செய்தனர். திருவிழாவின் முக்கிய அம்சமாக ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17) இரவு நான்கு அம்பாள்களும் அதனதன்  வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது. முன்னதாக பக்தர்கள் தயார் செய்திருந்த முளைப்பாலிகை கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு, சிறப்பு ஆராதனைக்குப் பின் பக்தர்கள் தலையில் சுமந்து அரசலாற்றங்கரைக்கு தீர்த்தவாரிக்கு புறப்படும் நிகழ்வு நடைபெறுகிறது. சிறப்பு மேள, நாகசுர வாத்தியங்கள், பல்வேறு கலைக்குழுவினருடன் முûளைப்பாலிகை சுமந்த பக்தர்களும், அவர்களைத் தொடர்ந்து அம்பாள்களும் தீர்த்தக்கரைக்கு எழுந்தருளுகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai