சுடச்சுட

  

  தேர்தல் நேர்மையாக நடக்க அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும்: தலைமைத் தேர்தல் அதிகாரி வி. கந்தவேலு

  By DIN  |   Published on : 17th March 2019 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மக்களவைத் தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடக்க அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைப்புத் தரவேண்டும் என மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி வலியுறுத்தினார்.
  காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரி வி. கந்தவேலு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர். இக்கூட்டத்தில் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி, காரைக்கால் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக தேர்தல் துறை எடுத்துவரும் நடவடிக்கைகளை விளக்கினார்.
  வரும் 19-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புப் பணி நடைபெறுவதால், வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதை பரிசோதித்துப் பார்க்கவும், பெயர் விடுபட்டிருந்தால் அதற்கான படிவத்தை உரிய துறையிடம் அளிக்கவும் கட்சியினர் ஒத்துழைக்க வேண்டும். தேர்தலில் அரசியல் கட்சியினர் கடும் சொற்களைப் பயன்படுத்தாமல், அமைதியாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடக்க ஒத்துழைப்புத் தரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
  அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பேசும்போது, வணிக ரீதியில் பணப் பரிமாற்றம் செய்யும்போது, வணிகர்கள் பாதிக்கப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கக் கூடாது. காரைக்கால் மாவட்டத்தில் நேர்மையாக தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனில், பறக்கும் படையினர், கண்காணிப்புக் குழுவினர் ஒவ்வொரு  சட்டப் பேரவைத் தொகுதியிலும் முகாமிடுவதும், சுற்றிவருவதுமாக இருக்க வேண்டும். அனைவரும் காரைக்கால் நகரப் பகுதியில் இருந்துகொண்டால், புகாரின்பேரில் குறிப்பிட்ட பகுதிக்கு சென்றடைவதற்குள் பணப் பரிமாற்றமோ, கடத்தலோ முடிந்துவிடும்.
  காரைக்கால் எல்லைகளான வாஞ்சூர், பூவம், அம்பகரத்தூர் போன்ற முக்கிய பகுதிகளில் சோதனைச் சாவடிகளில் வாகன சோதனையே முறையாக செய்யப்படுவதில்லை. இவைகளை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை எடுத்துக்கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai