திருநள்ளாறு புறவட்டச் சாலையில் மின் விளக்குகளை சீரமைக்க வலியுறுத்தல்

திருநள்ளாறு புறவட்டச் சாலையில் மின் விளக்குகள் முறையாக எரியவில்லை எனவும், பொதுப்பணித்துறை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை


திருநள்ளாறு புறவட்டச் சாலையில் மின் விளக்குகள் முறையாக எரியவில்லை எனவும், பொதுப்பணித்துறை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயிலில் சனீஸ்வர பகவானை தரிசிக்கும் வகையில், நாடெங்குமிருந்து பக்தர்கள் வருகை தருவதால், திருநள்ளாறு கோயில் நகரமாக அறிவிக்கப்பட்டு, வளர்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. 
இந்தத் திட்டத்தில் திருநள்ளாறில் வடக்குப் புறவட்டச் சாலை அமைத்து பயன்பாட்டில் இருந்துவருகிறது. இது திருநள்ளாறு பிரதான சாலையிலிருந்து தேனூர் சாலையை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பெரும் பகுதி இடத்தில் மின் விளக்குகள் எரியவில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
இதுகுறித்து திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறியது:
வடக்குப் புறவட்டச் சாலை என்பது இருபுற போக்குவரத்துக்குக்குரியதாகவும், சாலையின் மையப் பகுதியில் இருபுறத்திற்கும் வெளிச்சம் கிடைக்கும் வகையில் கம்பங்கள் நிறுவி விளக்குகளை பொதுப்பணித்துறையின் கோயில் நகர மேம்பாட்டுத் திட்டத்தினர் அமைத்துள்ளனர். ஆனால் இந்த சாலை 2 கி.மீ. தூரம் உள்ள நிலையில் சுமார் 1 கி.மீ. தூரம் வரை மின் விளக்குகள் எரியவில்லை. மாலை நேரத்தில் பெண்கள், முதியோர் என பல்வேறு தரப்பினர் நடை  பயிற்சியில் ஈடுபடுகின்றனர். பணிக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில்  இரவு நேரத்தில் வீடு திரும்புவோர் ஏராளம். சாலையின் இருபுறமும் குடியிருப்புகளோ, வேறு எந்த வளர்ச்சித் திட்டங்களோ இன்றி திறந்தவெளியாகவும், கருவேல மரங்கள் மண்டிக் கிடப்பதால் பாதுகாப்பாற்றதாகவும்  இருக்கிறது.
இந்த இடத்தில் உள்ள மின் கம்பங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகளை விரைவாக சீர்செய்து, விளக்குகளை எரியச் செய்ய வேண்டும். தொடர்ந்து பழுதுகள் ஏற்படுவதால், இவற்றைக் கண்காணித்து சீர்செய்ய அரசுத்துறையில் தனியொரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். இச்சாலையில் ஏற்படும் மின் பழுதை பொதுப்பணித்துறையிடம் தெரிவிப்பதா, மின்துறையிடம் தெரிவிப்பதா, கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் தெரிவிப்பதா, திருநள்ளாறு கோயில் நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வதா என்பது குழப்பமாக உள்ளது. இந்த விவகாரத்தில் திருநள்ளாறை சேர்ந்த வேளாண் துறை அமைச்சர் தனி கவனம் செலுத்தவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com