தேர்தல் நடத்தை விதிகளை மீறினால் மதுக்கடைகளின் உரிமம் ரத்து

தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டால், மதுக்கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்டத் தேர்தல் அதிகாரி எச்சரித்தார்.


தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டால், மதுக்கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்டத் தேர்தல் அதிகாரி எச்சரித்தார்.
காரைக்கால் நகராட்சி கூட்ட அரங்கில் மாவட்டத் தேர்தல் அதிகாரி ஏ.விக்ரந்த் ராஜா தலைமையில் வெள்ளிக்கிழமை காரைக்கால் மாவட்டத்தில் கள், சாராயக் கடைகளின் உரிமையாளர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. 
இதில், தேர்தல் நடத்தை விதிகள் குறித்து துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ், மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால் உள்ளிட்டோர் கடை உரிமையாளர், மேலாளர்களுக்கு விளக்கிக் கூறினர். கூட்டத்தில் மாவட்டத் தேர்தல் அதிகாரி ஏ.விக்ரந்த் ராஜா பேசியது: காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து கள், சாராயக் கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். கேமராவை பொருள் விற்பனை செய்யுமிடம், கடையின் வெளிப்புறத்தை பார்த்த அமைப்பில் அமைக்க வேண்டும். கடைகள் தினமும் திறந்து, மூடுவதற்கு அனுமதிக்கப்பட்ட நேரம் காலை 6 முதல் இரவு 10 மணி வரை என்பதை கண்டிப்பாக அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். சரக்குகளுக்கு பெர்மிட் போடுவதும் காலை 6 முதல் பகல் 10 மணிக்குள் முடித்துவிடவேண்டும்.
கூடுதல் நேரமோ, முன்கூட்டியோ கடையைத் திறந்து வியாபாரம் செய்யக்கூடாது. வாக்குப் பதிவு நாளின்போதும், வாக்கு எண்ணிக்கையின்போதும் கடைகளை மூடிவிட வேண்டும். விற்பனையை அளவுக்கு அதிகமாக யாருக்கும் செய்யக் கூடாது. குறிப்பாக சிறுவர்களுக்கு மதுபான விற்பனை அறவே கூடாது. கடையில் வைத்திருக்கும் மதுபானத்துக்கு விற்பனை, இருப்பு குறித்த பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிகளை முழுமையாக மதுக்கடையினர் கடைப்பிடிக்க வேண்டும். எந்தவொரு தவறான செயலிலும் ஈடுபடுவது தேர்தல் துறைக்கு தெரியவந்தால், கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றார் அவர்.  இக்கூட்டத்தில் கலால் துறையினர், தேர்தல் துறை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com