பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு விவிபாட் இயந்திர செயல் விளக்கம்

பாலிடெக்னிக் கல்லூரியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், விவிபாட் இயந்திர செயல் விளக்க நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

பாலிடெக்னிக் கல்லூரியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், விவிபாட் இயந்திர செயல் விளக்க நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டத் தேர்தல் துறை சார்பில், கல்லூரிகளில் முதல் முறை வாக்காளர்களாக உள்ளோருக்கு வாக்குச் சாவடி குறித்தும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள், வரும் மக்களவைத் தேர்தல் முதல் அமல்படுத்தப்படும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் விவிபாட் (மின்னணு வாக்குப்பதிவு  ஒப்புகை சீட்டு இயந்திரம்) செயல்பாடுகள் குறித்தும் விழிப்புணர்வு செய்யப்படுகிறது. காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் விவிபாட் இயந்திரம் குறித்த செயல் விளக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் டி. சந்தனசாமி முன்னிலையில், பயிற்சியாளர்கள் கே.செந்தில்வேல், சுவாமிநாதன், எஸ்.கார்த்திகேசன்  ஆகியோர் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்குகளைப் பதிவு செய்யும் முறை, யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்துகொள்ள விவிபாட் இயந்திரத்திலிருந்து 7 விநாடிகள் மட்டுமே வெளியே தெரியும் பதிவு காகிதம் குறித்தும் பயிற்சியாளர்கள் விளக்கிக் கூறினர்.
கல்லூரி மாணவ, மாணவியர் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இருப்பதை வரும் 19-ஆம் தேதிக்குள்  உறுதி செய்துகொள்ள வேண்டும். பெயர் விடுபட்டிருந்தால், உரிய படிவத்தை பூர்த்தி செய்து அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். வீட்டில் உள்ள பெற்றோர்கள் உள்ளிட்டோரிடமும் வாக்குப் பதிவின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி, அவர்களையும் வாக்களிக்கச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com