கிராமப்புற வாக்காளர்களுக்காக நடமாடும் மாதிரி வாக்குச்சாவடி வாகனம்

நகரப் பகுதியைபோல காரைக்கால் கிராமப்புற வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த

நகரப் பகுதியைபோல காரைக்கால் கிராமப்புற வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடமாடும் மாதிரி வாக்குச்சாவடி வாகனம் சனிக்கிழமை இயக்கிவைக்கப்பட்டது.
காரைக்கால் மாவட்டத்தில் தேர்தல் துறை சார்பில், 100 சதவீதம் வாக்குப்பதிவு அவசியத்தை வலியுறுத்தியும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிச்செய்து கொள்ளும் விவிபாட் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து அறியும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாதிரி வாக்குச்சாவடி என்பதை தினமும் மாலை வேளையில் மட்டும் செயல்படும் வகையில் காரைக்கால் அம்மையார் குளக்கரை, கடற்கரை வளாகம், திருநள்ளாறு கோயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு என்பது நகரப் பகுதிகளுக்கு காட்டும் ஆர்வம், மாவட்டத்தில் உள்ள கிராமப்புற வாக்காளர்கள் வாழும் பகுதியில் செய்யப்படவில்லை. விவிபாட் இயந்திரம் குறித்து கிராமப்புறத்தில் பெரும்பான்மையான வாக்காளர்களுக்கு புரிதல் இல்லை என புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. 
இந்நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரி ஏ. விக்ரந்த் ராஜா உத்தரவின் பேரில், காரைக்கால் மாவட்டத்தில் கிராமப்புற மக்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடமாடும் மாதிரி வாக்குச்சாவடி வாகனம் சனிக்கிழமை இரவு இயக்கிவைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட துணை ஆட்சியர் எஸ். பாஸ்கரன், மண்டல காவல் கண்காணிப்பாளர் டி. மாரிமுத்து ஆகியோர் இயக்கி வைத்தனர். இந்த வாகனத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரமும், விவிபாட் இயந்திரமும் இருக்கிறது. 
சோதனை முறையில் வாக்குப் பதிவு செய்தவுடன், 7 விநாடி மட்டும் வெளியே தெரியும் வகையில் வரும் வாக்குப் பதிவானதை உறுதி செய்யும் காகிதம் காணப்படுவதை வாக்காளர்கள் தெரிந்துகொள்வர். ஒலிபெருக்கி மூலம் வாகனம் கிராமப்புறங்களுக்கு வருவதை தெரிவிக்கப்படும். இதை கிராமத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என தேர்தல் துறையினர் கேட்டுக்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com