ஜெயவீர பால ஆஞ்சநேயர் கோயில் சம்வத்ஸரா அபிஷேக வழிபாடு

காரைக்காலில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீஜெயவீர பால ஆஞ்சநேயர் கோயில் சம்வத்ஸரா அபிஷேக ஆராதனை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைக்காலில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீஜெயவீர பால ஆஞ்சநேயர் கோயில் சம்வத்ஸரா அபிஷேக ஆராதனை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் காமராஜர் சாலையில் ஸ்ரீ ஜெயவீர பால ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் தனிக்கோயிலாக திகழும் இந்த ஆஞ்சநேயர் கோயில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்டு சம்ப்ரோக்ஷ்ணம் (குடமுழுக்கு) செய்யப்பட்டது. 
வாரந்தோறும் சனிக்கிழமையில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்கின்றனர். அமாவாசை, ஹனுமன் ஜயந்தி உள்ளிட்ட முக்கிய விழா நாள்களில் பக்தர்கள் திரண்டு தரிசனத்தில் ஈடுபடுவர்.
இவ்வகை சிறப்பு பெற்ற இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்று 5-ஆம் ஆண்டையொட்டி சம்வத்ஸரா அபிஷேக நிகழ்ச்சி  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் பஞ்சசூக்த ஹோமம் நடத்தப்பட்டது. பட்டாச்சாரியார்கள் ஹோமத்தை நடத்தி, பூர்ணாஹூதி தீபாராதனை செய்தனர். 
தொடர்ந்து, ஹோமத்தில் வைக்கப்பட்டிருந்த புனிதநீரை சிறப்பு வாத்தியங்கள் முழங்க தலையில் சுமந்து சென்று, மூலஸ்தானத்தில் ஸ்ரீ ராமர், ஸ்ரீ ஜெயவீர பால ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம் செய்தனர். இதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 
மாலை நிகழ்ச்சியாக ஸ்ரீராமர் பட்டாபிஷேக திருக்கோலம் செய்யப்பட்டு, ஸ்ரீஆஞ்சநேயர் வீதியுலா புறப்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.  ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் குழுவினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com