ஸ்ரீஅன்பு மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா

திருநள்ளாறு அருகேயுள்ள ஸ்ரீஅன்பு மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாறு அருகேயுள்ள ஸ்ரீஅன்பு மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குள்பட்ட திருநள்ளாறு கொம்யூன், சுரக்குடி பகுதியில் ஸ்ரீ சோமநாத சுவாமி, ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் வகையறாவை சேர்ந்த ஸ்ரீ அன்பு மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தீமிதி உத்ஸவம் பிரசித்திப் பெற்றதாகும். பிரார்த்தனையின் பேரில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்குச் செல்கின்றனர். 
இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகள் கடந்துவிட்டதையடுத்து, திருப்பணிகள் செய்து குடமுழுக்கு செய்ய கோயில் நிர்வாகத்தினர், கிராமத்தினர் முடிவு செய்தனர். புதுச்சேரி அரசு சார்பில் அளிக்கப்பட்ட நிதியுதவி மற்றும் நன்கொடைகள் மூலம் ஓராண்டுக்கும் மேலாக கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றன. 
திருப்பணிகள் நிறைவில் குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டதையொட்டி, கோயில் அருகே நான்கு கால யாகசாலை பூஜைகள் மார்ச் 15-ஆம் தேதி இரவு முதல் கால பூஜையுடன் தொடங்கின. மார்ச் 16-ஆம் தேதி சனிக்கிழமை காலை, இரவு 2, 3-ஆம் கால பூஜையும், மார்ச் 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் 4-ஆம் கால பூஜை மகா பூர்ணாஹூதி, தீபாராதனை செய்யப்பட்டு புனிதநீர் கடம் புறப்பாடு நடைபெற்றது.
காலை 7.30 மணியளவில் விமான குடமுழுக்கும்,  7.40 மணிக்கும் மூலஸ்தான குடமுழுக்கும் செய்யப்பட்டு கலசத்துக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில், புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், உபயதாரர்கள், நன்கொடையாளர்ள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.  மாலை நிகழ்வாக சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் குழுவினர், திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com