காங்கிரஸ் முதன்மையான வாக்குகள் பெற நடவடிக்கை

மக்களவைத் தேர்தலில் காரைக்கால் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி முதன்மையான வாக்குகள் பெறுவதற்கு

மக்களவைத் தேர்தலில் காரைக்கால் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி முதன்மையான வாக்குகள் பெறுவதற்கு தீவிர நடவடிக்கை எடுப்பேன் என புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் கூறினார்.
திமுக கூட்டணியில் புதுச்சேரி தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. இந்தநிலையில், தில்லியில் நடைபெற்ற வேட்பாளர் தேர்வுக்கான ஆலோசனைக் கூட்டத்தில், புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி, பேரவைத் தலைவர் வி. வைத்திலிங்கம், பிரதேச காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர். எனவே, வி. வைத்திலிங்கம் அல்லது ஏ.வி. சுப்பிரமணியம் ஆகிய இருவரில், ஒருவருக்கு வாய்ப்பு கிடைப்பது 
உறுதியானது.
இந்தநிலையில், புதுச்சேரி தொகுதி பேரவைத் தலைவர் வி. வைத்திலிங்கம் தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, பேரவைத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்த அவர், வேட்புமனு தாக்கல் செய்தார். 
இதுகுறித்து ஏ.வி.சுப்பிரமணியன் கூறுகையில், புதுச்சேரி தொகுதி வேட்பாளர் தேர்வில் எனது பெயரும்  பரிசீலிக்கப்பட்டது. வாய்ப்பளித்தால் போட்டியிடுவதாகவும் கூறியிருந்தேன். கட்சித் தலைமை, வி. வைத்திலிங்கத்துக்கு வாய்ப்பு அளித்துள்ளது. என்னைப் பொருத்தவரை எந்தவித மன பேதங்களுக்கும் இடமில்லை. காரைக்காலில் காங்கிரஸ் அதிக வாக்குகள் பெறவேண்டுமென்பதற்கான பணிகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டோம்.
மக்களவைத் தேர்தலில், காரைக்கால் மாவட்டத்தில் காங்கிரஸ் முதன்மையான வாக்குகளைப் பெற கடுமையாக உழைப்போம். வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக உள்ளனர். காங்கிரஸ் நிச்சயம் புதுச்சேரியில் வெற்றிபெறும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com