திருப்பட்டினம் பெருமாள் கோயிலில் தாயார்-பெருமாள் பள்ளியறை சேவை

பங்குனி உத்திரத்தையொட்டி, திருப்பட்டினம் பெருமாள் கோயிலில் தாயார்- பெருமாள் பள்ளியறை சேவை வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

பங்குனி உத்திரத்தையொட்டி, திருப்பட்டினம் பெருமாள் கோயிலில் தாயார்- பெருமாள் பள்ளியறை சேவை வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் பங்குனி உத்திர நாளில் சிவ மற்றும் வைணவத் தலங்களில் தேர் திருவிழா, திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் ரங்கநாயகித் தாயார், நித்யகல்யாணப் பெருமாள் திருக்கல்யாணம் வியாழக்கிழமை இரவு நடைபெற்று சேர்த்தி சேவை நடைபெற்றது.
திருப்பட்டினத்தில் பிரசித்திப் பெற்ற செங்கமலத்தாயார் சமேத வீழி வரதராஜப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர நாளான வியாழக்கிழமை இரவு சிறப்பு அலங்காரத்தில் தாயார் பிராகாரப் புறப்பாடு நடைபெற்றது. கடந்த ஓராண்டுக்கு முன்பு கோயிலில் புதிதாக பள்ளியறை அமைக்கப்பட்டு, உத்ஸவ காலங்களில் பள்ளியறை சேவை நடைபெற்று வருகின்றன. பிராகாரப் புறப்பாடு நிறைவடைந்ததும் தாயார் மற்றும் வரதராஜப் பெருமாள் சேர்த்தி சேவை பள்ளியறையில் நடைபெற்றது. சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை கோயில் தனி அதிகாரி ரங்கராஜன் செய்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com