தீ விபத்தைத் தடுக்க அறிவுறுத்தல்

கோடைக் காலம் தொடங்கிவிட்டதால், தீ விபத்து ஏற்படாமல் தடுக்க பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோடைக் காலம் தொடங்கிவிட்டதால், தீ விபத்து ஏற்படாமல் தடுக்க பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு : கோடைக் காலம் தொடங்கிய நிலையில், நிலவி வரும் கடும் வெப்ப நிலை காரணமாகவும், நமது கவனக் குறைவாலும் எளிதில் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
பொதுமக்கள் குறிப்பாக குடிசை வீடுகளில் வசிப்போர், வைக்கோல் போர் வைத்திருப்போர் போதுமான முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும், எளிதில் தீப்பற்றக்கூடிய வகையிலான பொருள்களை மிக கவனமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். குப்பைகளை எரிக்கும்போது காற்றின் வேகம் காரணமாக அருகில் உள்ள குடிசை வீடுகள் மற்றும் வைக்கோல்  போருக்கு தீ பரவ வாய்ப்புள்ளதால், கோடைக் காலம் முடியும் வரை குப்பைகளைத் தீயிட்டுக் கொளுத்த வேண்டாம் அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com