பொதுக்கூட்டம், பிரசாரம்: அனுமதி பெற அறிவுறுத்தல்

பொதுக்கூட்டம், பிரசாரம், ஊர்வலம் போன்றவற்றுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக தேர்தல்துறையிடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டம், பிரசாரம், ஊர்வலம் போன்றவற்றுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக தேர்தல்துறையிடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்டத் தேர்தல் அதிகாரி ஏ.விக்ரந்த் ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மக்களவைத் தேர்தலையொட்டி மாதிரி தேர்தல் நடத்தை நெறிகள் அமலில் உள்ளபோது, மாவட்டத் தேர்தல் அதிகாரியின் அனுமதி பெற்ற பின்னரே அனைத்து விதமான அரசியல் நிகழ்ச்சிகள், கூட்டங்கள், ஊர்வலம், பிரசாரங்கள் போன்றவற்றை நடத்த வேண்டும்.
அனைத்து வகையான அரசியல் நிகழ்ச்சிகளுக்கும் 48 மணி நேரத்துக்கு முன்பாகவே விண்ணப்பித்து அனுமதி பெறவேண்டும் என்பது தலைமைத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலாகும். குறிப்பாக, பிரசாரம் செய்வதற்காக அரசியல் கட்சிகளின்  தலைவர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரை அவர்களின் வருகையை 48 மணி நேரத்துக்கு முன்பாகவே உறுதிசெய்து, மேற்படி நிகழ்வின் அனுமதிக்கு வரையறுக்கப்பட்ட கால அளவில் விண்ணப்பித்தல் அவசியமாகும்.
இதுகுறித்து அனைத்து விவரங்களுடன் மாவட்டத் தேர்தல் அதிகாரிக்கு 48 மணி நேரத்துக்கு முன் h‌t‌t‌p‌s://‌s‌u‌v‌i‌d‌h​a.‌e​c‌i.‌g‌o‌v.‌i‌n  என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இணையதள விண்ணப்ப முறையில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், மாவட்டத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் செயல்படும்
ள்ன்ஸ்ண்க்ட்ஹ என்ற தனிப் பிரிவை  அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கத் தவறுபவர்களின் விண்ணப்பங்கள் எந்த காரணம் கொண்டும் அனுமதிக்க இயலாது. எனவே அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் உள்ளிட்டோர் இதற்கு முழு ஒத்துழைப்புத் தரவேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com