ராஜகணபதி கோயிலில் சூரிய பூஜை

காரைக்கால் ராஜகணபதி கோயிலில் விநாயகர் மீது சூரியக் கதிர் விழும் 7 நாள் பூஜை நடைபெறுகிறது.

காரைக்கால் ராஜகணபதி கோயிலில் விநாயகர் மீது சூரியக் கதிர் விழும் 7 நாள் பூஜை நடைபெறுகிறது.
காரைக்கால் கோயில்பத்து பகுதியில் பிரசித்திப் பெற்ற ராஜகணபதி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில், 7 நாள்கள் சூரியக் கதிர் விநாயகர் மீது விழும் வகையிலான சூரிய பூஜை நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த 1988-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டுவருகிறது.  நிகழாண்டுக்கான இந்த நிகழ்வு கடந்த 2 நாள்களாக நடைபெற்றுவருகிறது. 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை   விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளி அங்கி சாற்றப்பட்டிருந்தது. மாலை 4.30 முதல் 6 மணிக்குள் சூரியக் கதிர், விநாயகர் மீது விழுந்தது. அப்போது சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. ஒவ்வொரு நாளும் சூரிய வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com