Enable Javscript for better performance
இளம் வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க அறிவுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தலில் இளம் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று மாவட்டத் தேர்தல் அதிகாரி அறிவுறுத்தினார்.
    காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் மாவட்டத் தேர்தல் துறை மற்றும் விழிப்புணர்வு அமைப்பான ஸ்வீப் ஆகியவை இணைந்து இளம் வாக்காளர்களிடையே தேர்தல் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கை செவ்வாய்க்கிழமை நடத்தின. இதில், மாவட்டத் தேர்தல் அதிகாரி ஏ. விக்ரந்த் ராஜா பங்கேற்றுப் பேசியது:
    இளம் வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் முதன் முதலில் வாக்களிக்க உள்ளனர். உங்களது வாக்கை நேர்மையாகவும், எந்தவித அச்சமின்றியும் செலுத்தவேண்டும். நாம் செலுத்தும் வாக்குக்கான மதிப்பு அளப்பரியது. நல்லவர்களைத் தேர்வு செய்ய இது பயன்படுவதோடு, வலிமையான ஜனநாயகத்துக்கும் நமது வாக்கு பயன்படுகிறது. எனவே, தேர்தல் நாளில் தவறாது அனைத்து இளம் வாக்காளர்களும் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்கவேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில் காரைக்காலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி பல்வேறு நிலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. தங்களது குடும்பத்தில் உள்ள வாக்காளர்களிடமும், சுற்றுவட்டாரத்தில் உள்ள வாக்காளர்களிடமும் வாக்களிப்பதன் மூலம் ஏற்படும் பயனை எடுத்துக்கூறி வாக்களிக்க வற்புறுத்தவேண்டும் என்றார் அவர்.
    நிகழ்ச்சியில், மாணவியர் பலர், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் குறித்தும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் விவிபாட் இயந்திரம் குறித்தும், நோட்டா குறித்தும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர். இவற்றுக்கு மாவட்டத் தேர்தல் அதிகாரி விக்ரந்த் ராஜா, மாவட்ட துணை ஆட்சியர் எம். ஆதர்ஷ் ஆகியோர் விளக்கமளித்தனர்.
    கல்லூரி முதல்வர் பாலாஜி பேசும்போது, " இந்த கல்லூரியைச் சேர்ந்த இளம் வாக்காளர்கள் 1,385 பேர் வருகிற மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இதன் மூலம் 1,385 குடும்பத்தில் உள்ளோரின் வாக்குகளும் செலுத்தப்படுவது உறுதியாகவேண்டும் என்றார். ஸ்வீப் நோடல் அதிகாரி வி.லட்சுமணபதி உள்ளிட்டோர் பேசினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai