Enable Javscript for better performance
காரைக்கால் பகுதியில் உளுந்து, பயறு அறுவடை தீவிரம்- Dinamani

சுடச்சுட

    

    காரைக்கால் பகுதியில் நெல் அறுவடைக்குப் பிந்தைய சாகுபடியான உளுந்து, பயறு ஆகிய பயிர்களின்  அறுவடைப் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
    நெல் அறுவடைக்குப் பிறகு உளுந்து, பயறு விதைப்பது வழக்கம். அதன்படி,  காரைக்கால் பகுதியில் சம்பா பருவ நெல் அறுவடை செய்த நிலத்தில் விவசாயிகள் உளுந்து மற்றும் பயறு ஆகியவற்றை பயிடத் தொடங்கினர். 
    குறிப்பாக திருநள்ளாறு, அம்பகரத்தூர், புத்தக்குடி, சேத்தூர், திருப்பட்டினம் பகுதியில் படுதார்கொல்லை, கோட்டுச்சேரி பகுதியில் திருவேட்டக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் உளுந்து, பயறு வகைகள்  பயிரிடப்பட்டன. கடந்த ஆண்டு வரை காரைக்காலில் சுமார் 2 ஆயிரம் ஹெக்டேர்  இலக்கில் உளுந்து, பயறு சாகுபடி செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டும் அதற்கு ஈடான வகையில் பயிரிட்டுள்ளதாக விவசாயிகளும், வேளாண் துறை தரப்பிலும் தெரிவிக்கப்படுகிறது. உளுந்து 65 முதல் 90 நாள்களுக்குள் அறுவடை செய்யக்கூடியது. பயறு 70 முதல் 90 நாள்களுக்குள் அறுவடை செய்யக்கூடியது. கடந்த ஆண்டுகளைப்போல அதிகமான மகசூலை நிகழாண்டு உளுந்து, பயறில் காணமுடியும் என்ற நம்பிக்கையில் உள்ளோம் என்று கூறும் விவசாயிகள், காரைக்காலிலேயே உளுந்து, பயறு வாங்கிச் செல்லும் வியாபாரிகள் உள்ளதால் விற்பனை செய்யமுடியும் என்று கூறினர். நெல் அறுவடை, உளுந்து, பயறு அறுவடை ஆகியவை எந்தவித இயற்கை பேரிடர், பூச்சிகளால் பாதிப்பின்றி அறுவடை செய்வதாக சில விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். 
    தற்போது உளுந்து மற்றும் பயறு அறுவடை தீவிரமாக நடைபெற்றுவருகிறது.  இதேபால், காரைக்காலில் குறிப்பிட்ட இடத்தில் பொங்கல் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. சில இடத்தில் எள் சாகுபடி செய்யப்படுகிறது. இவை மிகவும் குறைந்த நிலப்பரப்பிலேயே நடக்கிறது.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai