Enable Javscript for better performance
காரைக்கால் மருத்துவமனையில்30-இல் மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    

    காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில், புதுச்சேரி ஜிப்மர்  மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கும் சிறப்பு முகாம் மார்ச் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
    இதுதொடர்பாக, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    காரைக்கால் அரசு பொது மருத்துவமனை உள் வளாகத்தில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில்  மார்ச் 30 -ஆம் தேதி  சிறுநீரகம்   மற்றும் சிறுநீரகவியல் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று, மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கவுள்ளனர். 
    அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் முகாமை  பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அந்த செய்திக் குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai