Enable Javscript for better performance
பொறியியல் கல்லூரி மாணவர்கள் சார்பில் துப்புரவுப் பணி- Dinamani

சுடச்சுட

    

    பொறியியல் கல்லூரி மாணவர்கள் சார்பில் துப்புரவுப் பணி

    By DIN  |   Published on : 27th March 2019 08:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொறியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற துப்புரவு தொடர்பான சிறப்பு முகாம் பேட்டை கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
    காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம், திருநள்ளாறு பகுதி பேட்டை கிராமத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பி.தம்பிதுரை முகாமை தொடங்கிவைத்தார். கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரி ஆர். ஸ்ரீதரன் முகாமின் நோக்கம் குறித்து மாணவர்கள், கிராமத்தினரிடையே பேசினார். மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரி வி. லட்சுமணபதி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். ஆரோக்கியம், பொது சுகாதாரம், துப்புரவு, கிராம மேம்பாடு, தனி மனித தூய்மை குறித்து விழிப்புணர்வுக் கருத்துகளை அவர் கூறினார். கல்லூரியின் 80-க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், பேட்டை கிராமத்தின் தெருக்களில் உள்ள குப்பைகளை அகற்றியதோடு, தூய்மையின் அவசியத்தை கிராமத்தினருக்கு விளக்கிக் கூறினர். திட்ட அதிகாரியும், உதவிப் பேராசிரியருமான ஜி.ஞானமுருகன் நன்றி கூறினார். மாணவர்களின் இந்த சேவையை கிராமத்தினர் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai