Enable Javscript for better performance
அங்கன்வாடி ஊழியர்களுக்கான பயிற்சி முகாம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    தேசிய ஊட்டச் சத்து திட்டத்தின் கீழ், காரைக்கால் அங்கன்வாடி ஊழியர்களுக்கு கணக்கெடுப்பு குறித்த பயிற்சி முகாம் புதன்கிழமை  தொடங்கியது.
    மத்திய அரசின் போஷான் அபியான் திட்டத்தை புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை செயல்படுத்தி வருகிறது. 
      இந்தத் திட்டத்தில் நாடு முழுவதும் மக்களை சேர்க்கும் வகையில் வீடுகள்தோறும் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது.
    இந்தப் பணியை புதுச்சேரி மாநிலத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மேற்கொள்கின்றனர். காரைக்கால் மாவட்டத்தில் 172 அங்கன்வாடி ஊழியர்களுக்கு கணக்கெடுப்பு செய்வது குறித்து பயிற்சி காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் கூட்ட அரங்கில்  புதன்கிழமை தொடங்கியது. இந்த பயிற்சி 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
    பயிற்சியை காரைக்கால் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அதிகாரி பி.சத்யா தொடங்கிவைத்துப் பேசினார். பயிற்சியாளர்களாக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் நோடல் அதிகாரிகள் அருண், ராஜசெல்வம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
    இந்த பயிற்சி குறித்து அதிகாரிகள் கூறியது:
    நாடு முழுவதும் போஷான் அபியான் திட்டத்தில் பயனாளிகளைத் தேர்வு செய்வதற்கான கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. 
    இந்த கணக்கெடுப்புக்காக அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஒரு ஸ்மார்ட் போன் தரப்பட்டுள்ளது. இதில் சிஏஎஸ் என்கிற  செயலியை பதிவிறக்கம் செய்துகொண்டு, வீடு வீடாகச் சென்று, கணக்கெடுப்புப் பணியை அங்கன்வாடி ஊழியர்கள் மேற்கொள்ளவேண்டும்.
    பயனாளிகள், அவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் போன்ற விவரங்களை  டிஜிட்டல் முறையாக மாற்றும் செய்ய இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் குறிப்பிட்ட இடத்தின் பயனாளிகள் எத்தனை பேர் மற்றும் அவர்கள் அடைந்த பயன்கள் ஆகிய விவரத்தை தெரிந்துகொள்ளமுடியும் 
    என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai