அனைத்துக் கல்லூரிகளிலும்  புகார் பெட்டி வைக்க ஏற்பாடு: ஆட்சியர் தகவல்

காரைக்காலில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் புகார் பெட்டி வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

காரைக்காலில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் புகார் பெட்டி வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் மகளிர் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா கலந்துகொண்டு, புதுச்சேரி மகளிர் ஆணைய இயக்குநர் கே. லட்சுமி, மனிதவள ஆலோசகர்  இ.லட்சுமி மௌலி, பாரம்பரிய நாட்டியக் கலை பேராசிரியை மேரி ஸ்டெல்லா, அரசு பொது மருத்துவமனை மருத்துவர் ஏ. உமா மகேஸ்வரி, பி.எஸ்.என்.எல். காரைக்கால் துணை கோட்டப் பொறியாளர் டி.அனுராதா ஆகியோருக்கு அவ்வையார் விருது வழங்கிப் பேசியது:
மகளிர் தின விழா கொண்டாடும்போது, பல்வேறு துறைகளில் சாதனை புரிந்துவருவோரைப் பாராட்டுவதும், மகளிரை பல நிலைகளில் ஊக்கப்படுத்துவதையும் தொடர்ந்து செய்துவருகிறோம். மகளிர் தின கொண்டாட்டம் என்பது வீட்டிலிருந்து தொடங்கவேண்டும். வீட்டில் உள்ள தாயாரை பாராட்டவேண்டும். இவ்வகை மனோபாவம் நம்மிடையே ஏற்படவேண்டும்.
காரைக்காலில் அனைத்து கல்லூரிகளிலும் புகார் பெட்டி வைக்கப்படவுள்ளன. எந்தவிதப் புகார்களையும் எழுத்துப்பூர்வமாக  தெரிவிக்கலாம்.  இந்த பெட்டியை ஆட்சியர், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் மட்டுமே திறக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். எனவே, மாணவிகள் தைரியமாக புகார் தெரிவிக்கலாம். காரைக்காலில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி வாக்காளர்கள் முழுமையாக தங்களது வாக்கை பதிவு செய்யவேண்டும் என்றார் ஆட்சியர். நிகழ்ச்சியில் மாவட்ட துணை ஆட்சியர் எம். ஆதர்ஷ், கல்லூரி முதல்வர் வி. பாலாஜி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஏ.எஸ்.டி.அன்சாரிபாபு, பி.எஸ்.என்.எல். காரைக்கால் கோட்டப் பொறியாளர் எம். சிவராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். பெற்றோர் ஆசிரியர் கழக முன்னாள் செயற்குழு உறுப்பினர் எம்.ஏ. முகம்மது அலியா வரவேற்றார். பேராசிரியர் முத்துக்குமார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com