Enable Javscript for better performance
படகு பராமரிப்புப் பணியில் மீனவர்கள் தீவிரம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    படகு பராமரிப்புப் பணியில் மீனவர்கள் தீவிரம்

    By DIN  |   Published On : 06th May 2019 01:33 AM  |   Last Updated : 06th May 2019 01:33 AM  |  அ+அ அ-  |  


    மீன்பிடி தடைக்காலம் தொடங்கிய நிலையில் காரைக்கால் துறைமுகத்தில், விசைப் படகுகள் என்ஜின் சர்வீஸ் செய்தல், படகுக்கு வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளை மீனவர்கள் ஆர்வத்துடன் செய்து வருகின்றனர்.
    ஆழ்கடல் மீன்பிடிப்பு செய்ய ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 -ஆம் தேதி வரை 61 நாள்  தடைக்காலமாகும். வங்கக் கடலில் மீன்கள் இனப்பெருக்க காலமாக கருதப்பட்டு இந்த தடையை மத்திய அரசு விதித்துள்ளது. நிகழாண்டு, தடைக்காலம் தொடங்கிய நாளில் இருந்து மீனவர்கள் விதிகளுக்குள்பட்டு, தங்களது படகுகளை மீன்பிடித் துறைமுகத்திலும், அரசலாற்றங்கரையிலும் நிறுத்தியுள்ளனர்.
    முதல்கட்டமாக கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஆழ்கடலில் பயன்படுத்தக்கூடிய அதிக எடை கொண்ட நீளமான வலைகளை சீரமைக்கும் பணியை தொடங்கினர். இந்த பணிகள் மீன்பிடித் துறைமுகத்திலும், அரசலாற்றங்கரையிலும், மீனவ கிராமங்களிலும் நடைபெற்று வருகிறது. வலை சீரமைப்புப் பணிகள் முடிவுக்கு வருவதற்கு ஏறக்குறைய ஒரு மாத காலமாகும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். தடைக்காலம் தொடங்கி 20  நாள்களாகிவிட்ட நிலையில், ஆழ்கடலுக்கு கொண்டு செல்லக்கூடிய விசைப்படகு பராமரிப்புப் பணியை மீனவர்கள் தற்போது தொடங்கியுள்ளனர்.
    காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தில் சுமார் 250  விசைப் படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மோட்டார்  ஃபைபர் படகுகள் அரசலாற்றங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. தவிர, கடலோர கிராமப்புறங்களில் படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. தடைக்காலம் நிறைவடைய இன்னும் 40 நாள்கள் உள்ள நிலையில், என்ஜின் சர்வீஸ் செய்தல், படகுக்கு வண்ணம் பூசுதல் ஆகிய பிரதானப் பணியை மீனவர்கள் தற்போது தொடங்கியுள்ளனர். துறைமுகத்தில் நிறுத்தியிருக்கும் பெரும்பாலான படகுகளில் பணிகள் நடைபெறுகின்றன.
    இதுதவிர, துறைமுகம் அருகே அரசலாற்றங்கரையில் புதிதாக இரும்பு விசைப்படகு கட்டும் பணியும் தனியார் பலரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை ஏறக்குறைய 20-க்கும் மேற்பட்டவை அடுத்த 2 மாதங்களில் தயாராகி கடலில் இறக்கப்படமென தெரிவிக்கின்றனர்.  பழைமையான மரத்தாலான விசைப்படகுகளுக்கு மாற்றாக இரும்பு விசைப்படகுக்கு மாறிவருவதாகவும், இதுவே பாதுகாப்பு மிக்கது எனவும் மீனவர்கள் கூறுகின்றனர்.
    இதுகுறித்து மீனவர்கள் கூறியது: என்ஜின் தொடர்ந்து இயக்கத்தில் இருப்பதால், தடைக்காலத்தில் இதன் பராமரிப்பில் தீவிர கவனம் செலுத்துவோம். இதன்படி, காரைக்கால், நாகப்பட்டினம் பகுதி என்ஜின் பழுதுநீக்கும் வல்லுநர்களிடம் பணிகளை ஒப்படைத்துள்ளோம்.
    துறைமுகத்தில் நிறுத்தியிருக்கும் படகில் சீரமைப்பு செய்யும் பணியையும் மேற்கொள்கின்றனர். என்ஜினின் சில பகுதிகள் பிரித்து பட்டறைக்கு கொண்டு செல்லவும் நேரிடுகிறது. இந்த பணிகள் மட்டுமே நீண்ட நாள் எடுத்துக்கொள்ளும் என்பதால், தற்போது பணிகளை தொடங்கியுள்ளோம். 
    தவிர, படகுக்கு புதிதாக வண்ணம் பூசும் பணிகளும் நடைபெறுகின்றன. ஏறக்குறைய பணிகள் தடைக்காலம் நிறைவுக்குள் முடிவுக்கு வந்துவிடும். படகுகள் ஒவ்வொன்றுக்கும் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை  செலவு செய்ய நேரிடுகிறது. 
    புதுச்சேரி அரசு தடைக்காலத்தில் படகு சீரமைப்புக்காக தரப்படும்  நிவாரணத்தை, காலத்தோடு வழங்கினால் ஒட்டுமொத்த மீனவர்களுக்கும் பயனளிக்கும் என்றனர்.
    மேலும் சில மீனவர்கள் கூறியது: மீன்பிடித் தடைக்காலத்தில் மீன்பிடித் தொழில் முடக்கம் ஏற்படுவதால், இந்த தொழிலை நம்பியுள்ள மீனவர்களுக்கு தினசரி வருமானம் இல்லாமல்போய்விடுகிறது. எனவே, மீனவ குடும்பத்துக்கு தரப்படும் தடைக்கால நிவாரணத்தை, தேர்தல் நடத்தை விதிகளால் தள்ளிப்போடாமல் உடனடியாக தரவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp