முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்குப் பயிற்சி
By DIN | Published On : 18th May 2019 07:14 AM | Last Updated : 18th May 2019 07:14 AM | அ+அ அ- |

காரைக்காலில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டன.
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள வாக்கு எண்ணும் அதிகாரிகள், உதவியாளர்களுக்கான பயிற்சி, காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட துணை ஆட்சியர் (வருவாய்) எம். ஆதர்ஷ் கலந்துகொண்டு பயிற்சியை தொடங்கி வைத்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள், உதவியாளர்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார். அரசு சார்பு செயலர் (ஓய்வு) முரளிதரன், பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மோகன் ஆகியோர் கலந்துகொண்டு, வாக்கு எண்ணும் அதிகாரிகள், உதவியாளர்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகள், வாக்குப் பதிவு இயந்திரத்தை கையாளும் முறை, வேட்பாளரின் முகவர்களிடம் இயந்திரத்தை காட்டும் முறை, விவிபாட் இயந்திரத்தில் பதிவானவற்றை எண்ணும் முறை குறித்து விளக்கிப் பேசினர். வாக்கு எண்ணும் மையத்துக்குள் அதிகாரிகள், உதவியாளர்கள் யாரும் செல்லிடப்பேசியை எடுத்து வரக்கூடாது என்றும், தேர்தல் ஆணையத்தின் விதிகளையும் விளக்கிப் பேசினர். அதிகாரிகள், ஊழியர்களின் சந்தேகங்களுக்கு பயிற்சியாளர்கள் விளக்கம் அளித்தனர்.