தாய்லாந்தில் பாக்ஸிங் பயிற்சி பெற்ற காரைக்கால் வீரருக்குப் பாராட்டு

தாய்லாந்து நாட்டில் தாய் பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபட்டு தாயகம் திரும்பிய காரைக்கால் கராத்தே நிறுவன இயக்குநருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுத் தெரிவித்தனர்.

தாய்லாந்து நாட்டில் தாய் பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபட்டு தாயகம் திரும்பிய காரைக்கால் கராத்தே நிறுவன இயக்குநருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுத் தெரிவித்தனர்.
காரைக்காலில் வி.ஆர்.எஸ். அகாதெமி என்கிற அமைப்பை நடத்தி வரும் வி.ஆர்.எஸ். குமார் என்பவர், கராத்தே, யோகா, சிலம்பம் உள்ளிட்ட பயிற்சியை மாணவர்களுக்கு அளித்து வருகிறார். தாய்லாந்து நாட்டில் டிவின் டைகர் மௌ தாய் என்ற அமைப்பு சார்பில் தாய் பாக்ஸிங் பயிற்சி கடந்த மே 4 முதல் 10-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், இந்தியா, ரஷ்யா, ஹாலந்து நாட்டிலிருந்து வீரர்கள் பலர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். காரைக்காலில் இருந்து வி.ஆர்.எஸ். குமார் இந்த பயிற்சியில் பங்கேற்று சான்றிதழ் பெற்று அண்மையில் தாயகம் திரும்பினார். இதுகுறித்து, அவர் கூறியது: தாய் பாக்ஸிங் என்பது குத்துச்சண்டையில் ஒருவிதம். முழங்கை, முழங்காலால் தாக்கும் முறையாகும். ஆண், பெண் இருபாலரும் இந்த பயிற்சியில் பங்கேற்றனர். பயிற்சி நிறையில் சோதனைகள் நடத்தப்பட்டு கலையை நிறைவாக கற்றமைக்காக சான்றிதழ் வழங்கப்பட்டது. இப்பயிற்சியை காரைக்கால் மற்றும் அண்டை மாவட்டத்தை சேர்ந்த பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்றுவிக்க தீர்மானித்துள்ளேன் என்ற அவர், காரைக்காலில் முன்னாள் அமைச்சர் ஏ.எம்.எச். நாஜிம், சட்டப் பேரவை உறுப்பினர்கள் கீதாஆனந்தன், சந்திர பிரியங்கா ஆகியோர் தமக்கு வாழ்த்துத் தெரிவித்ததாக கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com