Enable Javscript for better performance
அரசின் அனுமதிக்காக குவிக்கப்பட்டுள்ள  மலேசிய மணல்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    அரசின் அனுமதிக்காக குவிக்கப்பட்டுள்ள  மலேசிய மணல்

    By DIN  |   Published On : 28th May 2019 09:36 AM  |   Last Updated : 28th May 2019 09:36 AM  |  அ+அ அ-  |  

    மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை கட்டுமானத்துக்குப் பயன்படுத்த, புதுச்சேரி அரசின் அனுமதியை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், கடந்த 15 நாள்களாக காரைக்கால் துறைமுகத்தில் குவித்துவைக்கப்பட்டுள்ளது.
     காரைக்கால் மாவட்டத்தில் கட்டுமானத்துக்கான மணல் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அரசின் உரிய விதிமுறைகளின்படி முதல் முறையாக அபான் மார்கெட்டிங் என்ற தனியார்  நிறுவனம் மலேசியாவிலிருந்து 54 ஆயிரம் டன் மணலை காரைக்கால் துறைமுகத்தில் இறக்குமதி செய்துள்ளது. காரைக்கால் மாவட்ட  ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா மற்றும் பொதுப்பணித் துறையினர் துறைமுகத்துக்குச் சென்று மணலை ஆய்வு செய்தனர். கட்டுமானத்துக்கு உகந்ததுதானா என்பதை பரிசோதிக்கும் வகையில் மணல் புதுச்சேரி ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
    இந்த மணலை விற்பனை செய்ய புதுச்சேரி அரசிடம் அனுமதி பெறவேண்டும். அவ்வாறு, புதுச்சேரி அரசின் அனுமதி பெற்றாலும், பொதுப்பணித் துறை வழிகாட்டலில் மணலை விற்பனை செய்யவேண்டும் எனக் கூறப்படுகிறது. இந்த அனுமதிக்கான ஏற்பாடுகள் செய்யும் காலக்கட்டம் மக்களவைத் தேர்தல் காலமாக இருந்ததால், காலதாமதம் ஏற்பட்டது. தவிர, மணல் கட்டுமானத்துக்கு உகந்ததுதானா என்பதற்கான ஆய்வு அறிக்கையும் வந்த பிறகே காரைக்கால் மாவட்ட நிர்வாகம் விநியோகத்துக்கான அனுமதியை தருமென கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு விரைவாக மேற்கொண்டு, மணல் விநியோகத்தை விரைவுப்படுத்தவேண்டும் என கட்டுமானம் செய்வோர் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.
    இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா திங்கள்கிழமை கூறியது: மணல் தர ஆய்வு அறிக்கை இதுவரை வரவில்லை. விற்பனை செய்வதற்கான அரசின் அனுமதியும் இன்னும் நிறுவனத்துக்கு கிடைத்ததாகத் தெரியவில்லை. இவை கிடைக்கும்பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் இவற்றை ஆராய்ந்துப் பார்த்து விற்பனைக்கு அனுமதி தரும் என்றார் ஆட்சியர்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp