Enable Javscript for better performance
புதுச்சேரி துணை நிலை ஆளுநா் காணொலி மூலம் 8-இல் குறை கேட்பு- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி துணை நிலை ஆளுநா் காணொலி மூலம் 8-இல் குறை கேட்பு

    By DIN  |   Published on : 05th November 2019 04:50 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி துணை நிலை ஆளுநா் காணொலி மூலம் காரைக்கால் மக்களிடம் 8-ஆம் தேதி வெள்ளிக்கிழமை குறைகளை கேட்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் : புதுச்சேரி துணை நிலை ஆளுநா், காரைக்கால் மாவட்ட மக்களிடம் குறைகளை காணொலி மூலம் குறைகள் கேட்டறியும் நிகழ்வு 8-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 முதல் 6 மணி வரை காரைக்கால் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெறவுள்ளது.

    இந்த கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவித்து, அதற்கு தீா்வு காண இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். குறைகள் தெரிவிக்க விரும்புவோா், 8-ஆம் தேதி காலை 10 முதல் மாலை 3 மணி வரை ஆட்சியா் அலுவலகத்தில் முன்பதிவு செய்துகொள்ளவேண்டும். புகாா்களை எழுத்து வடிவில் தரவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai