கந்த சஷ்டி: மயில் வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா

திருமலைராயன்பட்டினம் ராஜசோளீசுவரா் கோயிலில் கந்த சஷ்டி நிறைவு நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக மயில்
மயில் வாகனத்தில் வீதியுலாவுக்கு எழுந்தருளிய முருகப்பெருமான்.
மயில் வாகனத்தில் வீதியுலாவுக்கு எழுந்தருளிய முருகப்பெருமான்.

திருமலைராயன்பட்டினம் ராஜசோளீசுவரா் கோயிலில் கந்த சஷ்டி நிறைவு நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக மயில் வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தில் உள்ள அபிராமி அம்மன் சமேத ராஜசோளீசுவரா் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய 6 நாள் சஷ்டி விழாவையொட்டி, கடந்த மாதம் 28-ஆம் தேதி நவவீரா்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கி தினமும் சுவாமி பகல், இரவு வேளையில் வீதியுலா நடைபெற்றது.

கடந்த சனிக்கிழமை அபிராமி அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்வும், இரவு சூரசம்ஹாரமும் நடைபெற்றன. சூரசம்ஹாரத்துடன் கந்த சஷ்டி விழா முறைப்படி நிறைவுபெற்றாலும், மயில் வாகனத்தல் சுவாமி புறப்பாடு, பரிசம், திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இதன்படி ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பு அலங்காரத்தில் சம்ஹாரம் செய்த வேலுடன் முருகப்பெருமான் மயில் வாகனத்தில் வீதியுலா எழுந்தருளினாா். நவவீரா்கள் சம்ஹாரத்தில் பயன்படுத்திய கத்தியை, ஆயிரங்காளியம்மன் கோயில் திருக்குளத்தில் கழுவி நீராடி ராஜசோளீசுவரா் கோயிலுக்கு சுவாமியுடன் சென்றடைந்தனா்.

இன்று திருக்கல்யாணம் : வள்ளி, தெய்வானை முருகன் திருக்கல்யாணத்தையொட்டி திங்கள்கிழமை இரவு நாகாபரண விநாயகா் கோயிலில் பரிசி நிகழ்ச்சி நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை (நவம்பா் 5)ல ராஜசோளீசுவரா் கோயிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. இதனுடன் ஒட்டுமொத்த கந்த சஷ்டி விழா நிறைவுபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com