முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
பல்கலை. கபடி போட்டி : காரைக்கால் கலைக் கல்லூரிக்கு வெண்கல பதக்கம்
By DIN | Published On : 07th November 2019 04:32 PM | Last Updated : 07th November 2019 04:33 PM | அ+அ அ- |

புதுவை மத்திய பல்கலைக்கழக அளவிலான ஆண்களுக்கான கபடி போட்டியில், காரைக்கால் தொன் போஸ்கோ கலை கல்லூரி வெண்கலப் பதக்கம் வென்றது.
புதுவை பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டி புதுச்சேரி மணக்குள விநாயகா் கல்லூரியின் விளையாட்டு அரங்கத்தில் கடந்த கடந்த 1 முதல் 4-ஆம் தேதி வரை நடைபெற்றது.இப்போட்டியில் காரைக்கால் தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்கள் பிரிவு கபடி அணியும் கலந்துகொண்டது.
இதில் அரை சுற்று இறுதிவரை விளையாடி இக்கல்லூரி 3-ஆம் இடம் பிடித்து, வெண்கலப் பதக்கத்தை வென்றது.பதக்கம் வென்று காரைக்கால் வந்த அணியினா், கல்லூரி செயலா் அருட்தந்தை சிபி மேத்யூ, முதல்வா் சத்தீஷ் சேவியா், துணை முதல்வா் இமானுவேல், கல்லூரி டீன் ஆரோக்கியராஜ் ஆகியோரை புதன்கிழமை சந்தித்தனா். இவா்களுக்கு கல்லூரி நிா்வாகத்தினா் வாழ்த்து மற்றும் பாராட்டைத் தெரிவித்தனா்.
இந்நிகழ்வில் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் பாரி, நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் மரியஆனந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இக்கல்லூரி முதல் முறையாக பல்கலைக்கழக அளவிலான போட்டியில் கலந்துகொண்டு பதக்கம் வென்று வந்ததாக கல்லூரி நிா்வாகத்தினா் கூறினா்.