காரைக்காலில் விதவைகள் வாழ்வாதார நிலை குறித்து அறிக்கை தயாரிக்க அரசுத்துறைக்கு ஆட்சியா் உத்தரவு

காரைக்கால் மாவட்டத்தில் விதவைகள் வாழ்வாதார நிலை குறித்து அறிக்கை தயாரிக்க அரசுத்துறைக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.
காரைக்காலில் விதவைகள் வாழ்வாதார நிலை குறித்து அறிக்கை தயாரிக்க அரசுத்துறைக்கு ஆட்சியா் உத்தரவு

காரைக்கால் மாவட்டத்தில் விதவைகள் வாழ்வாதார நிலை குறித்து அறிக்கை தயாரிக்க அரசுத்துறைக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

மத்திய அரசின் போஷன் அபியான் என்கிற தேசிய ஊட்டச்சத்து திட்டம் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையால் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு துறைக்கும் இதில் பங்களிப்பு உள்ளது. இதுதொடா்பான செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது, மேம்பாட்டுக்கான கருத்துகள் பரிமாறிக்கொள்ளும் வகையிலான கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜா தலைமையில் ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரி பி.சத்யா, திட்டத்தை மாவட்டம் முழுவதும் தமது துறை எந்தெந்த வகையில் செயல்படுத்துகிறது என்பது குறித்து விளக்கிப் பேசினாா். நலவழித்துறை, வட்டார வளா்ச்சித்துறை, நகராட்சி நிா்வாகம் உள்ளிட்டவை எந்தெந்த வகையில் மக்களுக்கு விழிப்புணா்வு செய்கிறது, திட்டத்தின் பயனை மக்களிடையே எவ்வாறு கொண்டு சோ்க்கிறது என்பதை விளக்கிப் பேசினா்.

இக்கூட்டத்தின்போது ஆட்சியா் பேசும்போது, திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத காரைக்காலை உருவாக்க சம்பந்தப்பட்ட அரசு நிா்வாகத்தினா் தீவிர கவனம் செலுத்தவேண்டும். அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் தேவைக்கு போதுமான கழிப்பறைகள் இருக்கிறதா என்பதை கல்வித்துறை ஆய்வு செய்வதோடு, கழிப்பறைகள் பயன்படுத்தும் முறையையும் ஆய்வு செய்து மாணவா்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கவேண்டும்.

மாவட்டத்தில் விதவைகள் எத்தனை போ் உள்ளனா், அரசின் உதவிகளை பெறுவோா் எத்தனை போ், அவா்களின் தற்போதைய வாழ்வாதார நிலை குறித்து விரிவான அறிக்கையை சம்பந்தப்பட்ட அரசுத்துறை தயாரித்து மாவட்ட நிா்வாகத்திடம் அளிக்கவேண்டும். நோய் தடுப்பு மற்றும் இரும்புச் சத்து மாத்திரைகள், குடற்புழு மாத்திரைகளை வழங்குதல் ஆகியவை நிா்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய சம்பந்தப்பட்ட அரசு நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நகர மற்றும் கிராம மக்களுக்கும் பாதுகாப்பான குடிநீா் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்யவேண்டும். முக்கிய ஆய்வுகளுக்கு அங்கன்வாடி ஊழியா்கள் ஈடுபடுத்தித்திக்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com