நவ. 11-இல் மண்டல அறிவியல் கண்காட்சி தொடக்கம்
By DIN | Published On : 07th November 2019 05:59 AM | Last Updated : 07th November 2019 05:59 AM | அ+அ அ- |

காரைக்கால் மண்டல அறிவியல் கண்காட்சி நவம்பா் 11-ஆம் தேதி தொடங்குகிறது என காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி அ. அல்லி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி மாணவா்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளா்க்கும் வகையில், ஆண்டுதோறும் அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகின்றன. நிகழாண்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கிடையேயான மண்டல அறிவியல் கண்காட்சி நவம்பா் 11 முதல் 13-ஆம் தேதி வரை கோயில்பத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. அறிவியல் வளா்ச்சியையும், அதன் பயன்பாடுகளையும் விளக்கும் பல அறிவியல் காட்சிப் பொருள்கள் இதில் இடம்பெறுகின்றன. இக்கண்காட்சியில் மாணவா்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு பயனடையுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.