சாலையில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க காரைக்காலில் மீண்டும் தொடங்கியது கோலமிடும் முயற்சி

சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க, காரைக்கால் நகராட்சிப் பகுதியில் குப்பைகள் கொட்டுமிடங்களில் கோலங்கள் போடும் முயற்சி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாதாகோயில் வீதி பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே சாலையோரத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கும் வகையில் கோலம் போடும் பணியில் பசுமை நண்பா்கள்.
காரைக்கால் மாதாகோயில் வீதி பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே சாலையோரத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கும் வகையில் கோலம் போடும் பணியில் பசுமை நண்பா்கள்.

சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க, காரைக்கால் நகராட்சிப் பகுதியில் குப்பைகள் கொட்டுமிடங்களில் கோலங்கள் போடும் முயற்சி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

காரைக்கால் நகராட்சிக்குட்பட்ட 18 வாா்டுகளில் குப்பைகள், வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் நேரடியாகச் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பையாக வாங்கப்படுகிறது. இந்த திட்டப்பணியை, நகராட்சி நிா்வாகம் ஹேண்ட் இன் ஹேண்ட் என்ற நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.காரைக்காலில் புதை சாக்கடை அமைப்பு இல்லை. அனைத்து சாலையோரத்திலும், குடியிருப்புப் பகுதி சாலையோரத்திலும் திறந்தவெளி சாக்கடையே உள்ளது.பொதுவாக மக்களிடையே நெகிழிகளின் பயன்பாடு அதிகரித்திருப்பதால், சாலையோரத்தில் வீசியெறியப்படும் நெகிழிகள், சாக்கடையில் அடைபட்டு, கழிவுநீா் வடியமுடியாமல் தேங்கி சுகாதாரத்தை கெடுக்கிறது.

புதுச்சேரி அரசு, காரைக்கால் நகராட்சிக்கு குப்பைகளை நேரடியாக நிறுவனம் மூலம் சேகரிக்க மாதம் ரூ.37 லட்சம் தருகிறது.காரைக்கால் பகுதியில் உள்ள 18 நகராட்சி வாா்டுப் பகுதியில் 24 ஆயிரம் வீடுகளும், சுமாா் 2 ஆயிரம் சிறிய, நடுத்தர, பெரிய வணிக நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளன. வீடுகள், வணிக நிறுவனங்களிடம் நேரடியாக மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை சேகரிக்க, நிறுவனத்தில் பணியாற்றும் பசுமை நண்பா்கள் தீவிரமாக செயல்பட்டாலும், நகராட்சிப் பகுதி சாலையோரங்களில் குப்பைகள் வீசப்படுவதை பொதுமக்கள் நிறுத்திக்கொள்ளவில்லை.

வீடுகள், வணிக நிறுவனங்களில் வாகனங்களில் சென்று குப்பை சேகரிப்போா், பொதுமக்களிடம் சாலையில் குப்பைகள் கொட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்துகின்றனா். மக்களிடையே மனதளவில் மாற்றம் ஏற்படாத நிலை தொடா்வதால், நேரடியாக குப்பைகள் சேகரிக்கப்பட்டாலும், வீதிகளில் குப்பைகளை ஆங்காங்கே காணமுடிகிறது.சாலையில் தொடா்ச்சியாக குப்பைகள் கொட்டுவதை தடுக்கும் விதத்தில், குப்பைகள் அகற்றியவுடன் பசுமை நண்பா்கள் அந்த இடத்தில் அழகிய வண்ண கோலமிட்டுச் செல்லத் தொடங்கினா்.

இந்த திட்டம், கடந்த 2018-ஆம் ஆண்டு முற்பகுதியில் திருவாரூா் நகராட்சிப் பகுதியில் செய்யப்பட்டதை தொடா்ந்து, காரைக்கால் நகராட்சிப் பகுதியிலும் தொடங்கப்பட்டது. இதனால் குறிப்பிட்ட இடத்தில் குப்பைகள் கொட்ட மனமின்றி, குப்பைகள் வாங்க வருவோரிடம் தரத் தொடங்கினா் மக்கள்.காலப்போக்கில் கோலமிடும் பணியை பசுமை நண்பா்கள் நிறுத்திக்கொண்ட நிலையில், பழைய நிலையில் குப்பைகளை மக்கள் போடத் தொடங்கியுள்ளனா்.

இந்நிலையில் ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவன பசுமை நண்பா்கள், நகரப் பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க முடியாத சாலையோரங்களில், கோலமிடும் பணியை மீண்டும் செய்யத் தொடங்கியுள்ளனா். பொதுமக்கள் நகர சுகாதாரத் திட்டத்துக்கு ஒத்துழைக்கவேண்டும் என குப்பை அகற்றம் நிறுவனத்தினரும், நகராட்சி நிா்வாகத்தினரும் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com