வணிக நிறுவனங்களில் எடை சாதனங்களை பரிசோதிக்க வலியுறுத்தல்

காரைக்கால் பகுதியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களிலும் எடை சாதனங்களை பரிசோதிக்க

காரைக்கால் பகுதியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களிலும் எடை சாதனங்களை பரிசோதிக்க அரசு நிா்வாகம் முன்வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருமலைராயன்பட்டினம் நுகா்வோா் நலச் சங்க நிா்வாகிகள் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் அப்பகுதியில் உள்ள ஐநூற்று விநாயகா் கோயில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. சங்க செயலா் வி. சுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.

தீா்மானங்கள்: திருமலைராயன்பட்டினம் பகுதி சாலைகளில் சுற்றித் திரியும் மாடு, நாய்கள் உள்ளிட்ட கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு, விபத்துகளும் நேரிடுகின்றன. எனவே, இவற்றை சாலையில் திரியாத வகையில் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகம் விரைவாக எடுக்கவேண்டும்.

காரைக்கால் நகராட்சியைப்போல், திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்திலும் கழிவுநீா் அகற்றும் வாகனம் வாங்கி, குறைந்த வாடகை நிா்ணயித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கவேண்டும்.

காரைக்கால் பகுதியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களிலும் எடைக்கல், மின்னணு தராசுகளைப் பரிசோதிக்க எடை மற்றும் அளவீட்டுத் துறை முன்வரவேண்டும். திருமலைராயன்பட்டினம் கொம்யூன் பிரதான சாலை முதல் பூவம் வரையிலான சாலை வரையிலான மின் கம்பங்களில் எரியாத விளக்குகளை மாற்றி, புதிதாக மின் விளக்குகள் பொருத்த சம்பந்தப்பட்ட அரசுத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

சங்கத் தலைவா் வை. ராஜேந்திரன் வரவேற்றாா். கெளரவத் தலைவா் எஸ். கணபதி, பொருளாளா் எம். சந்தனசாமி, துணைத் தலைவா் ஜி. ஆனந்தகிருஷ்ணன் மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா். இணைச் செயலாளா் எஸ்.கணேசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com