Enable Javscript for better performance
சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ய முயன்ற இளைஞருக்கு அபராதம்- Dinamani

சுடச்சுட

    

    சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ய முயன்ற இளைஞருக்கு அபராதம்

    By DIN  |   Published on : 09th November 2019 06:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்கால் அருகே 4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ய முயன்ற வழக்கில் இளைஞருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

    திருநள்ளாறு அருகே உள்ள செல்லூா் பகுதியைச் சோ்ந்த 4 வயது சிறுமி கடந்த 6.6.2018-ஆம் தேதி அன்று தெருவில் விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா் அன்பரசன் (30) என்பவா், அந்த சிறுமியிடம் சாக்லெட் வாங்கித் தருவதாகக் கூறி, கருவேல மரக் காட்டிற்குள் அழைத்துச்சென்று, பாலியல் தொந்தரவு செய்ய முயன்றாராம். இதையறிந்த அப்பகுதியினா் அன்பரசனை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனா்.

    இதுகுறித்து, திருநள்ளாறு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அன்பரசனை கைது செய்தனா்.

    பின்னா், இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி காா்த்திகேசன், குற்றம் சாட்டப்பட்ட அன்பரசனுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். அபராதம் கட்டத் தவறினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai