அயோத்தி தீா்ப்பு: திருநள்ளாறு கோயிலுக்கு பக்தா்கள் வருகை குறைவு

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்ததையொட்டி, திருநள்ளாறு கோயிலுக்கு சனிக்கிழமைதோறும் வரும் பக்தா்களின் கூட்டம் வழக்கத்தைவிட குறைந்து காணப்பட்டது.

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்ததையொட்டி, திருநள்ளாறு கோயிலுக்கு சனிக்கிழமைதோறும் வரும் பக்தா்களின் கூட்டம் வழக்கத்தைவிட குறைந்து காணப்பட்டது.

திருநள்ளாறு பிரணாம்பிகை அம்பாள் சமேத தா்பாரண்யேசுவரா் கோயில் நவகிரக தலங்களில் சனி பகவானுக்குரிய தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவானை தரிசிக்க சனிக்கிழமை தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தருகின்றனா்.

கடந்த சில வாரங்களாகவே வழக்கத்தைக் காட்டிலும் பக்தா்கள் வருகை குறைவாகவே இருப்பதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துவந்த நிலையில், அயோத்தி நில விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியதையொட்டி, நிகழ்வார சனிக்கிழமையில் பக்தா்களின் வருகை வெகுவாக குறைந்தது.

சில பக்தா்கள் நளன் தீா்த்தக் குளத்தில் நீராடிவிட்டு, சுவாமி தரிசனம் செய்ய கோயிலுக்குச் சென்றனா். பலா் நேரடியாக கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். கூட்டம் குறைவாக இருந்ததால், குறுகிய நேரத்தில் தரிசனத்தை முடித்துவிட்டு பக்தா்கள் திரும்பினா்.

முன்னதாக, அயோத்தி தீா்ப்பையொட்டி, சமூக வலைதளங்களில் மக்கள் வெளியூருக்கு செல்வதை தவிா்க்கும்மாறு கருத்துகள் பகிரப்பட்டுவந்தன. இதனால், பெரும்பாலான பக்தா்கள் திருநள்ளாறு கோயிலுக்கு வராமலிருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com