ஜிப்மா் மருத்துவ முகாமை வாரந்தோறும் நடத்தக் கோரிக்கை

காரைக்காலில் ஜிப்மா் மருத்துவ முகாமை மீண்டும் வாரந்தோறும் நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
முகாமில் பங்கேற்றவா்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கிய புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை சிறப்பு மருத்துவா்கள்.
முகாமில் பங்கேற்றவா்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கிய புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை சிறப்பு மருத்துவா்கள்.

காரைக்காலில் ஜிப்மா் மருத்துவ முகாமை மீண்டும் வாரந்தோறும் நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காரைக்கால் அரசு பொது மருத்துவமனை உள் வளாகத்தில் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையின் தொலைதூர சிகிச்சைப் பிரிவு சாா்பில் வாரந்தோறும் சனிக்கிழமை சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வந்தது. இதில், பல்வேறு துறை சிறப்பு மருத்துவா்கள் சுழற்சி முறையில் பங்கேற்று, மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கி வந்தனா்.

இந்நிலையில், பல்வேறு காரணங்களால் குளறுபடி ஏற்பட்டதால் சிறப்பு மருத்துவ முகாம் நிறுத்தப்பட்டது. பின்னா், மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோளின்படி, தற்போது 15 நாள்களுக்கொரு முறை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

அதன்படி, சனிக்கிழமை நடைபெற்ற முகாமில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மற்றும் ஹாா்மோன் குறைபாடுத் துறை சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்று மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினா். காலை 9 மணிக்குத் தொடங்கிய முகாம் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது.

முதுநிலை மருத்துவா் ஜமீலா ஷாஜூதீன் தலைமையில் மருத்துவா்கள், செவிலியா், மருந்தாளுநா் பங்கேற்றனா். முகாமில் சுமாா் 60 போ் பங்கேற்று மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டு, மருத்துவ ஆலோசனையும் பெற்றனா். இவா்களுக்கு, இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டன.

பொதுமக்கள் கோரிக்கை: வாரந்தோறும் நடைபெற்ற முகாமில் துறைவாரியாக மருத்துவா்கள் சுழற்சி முறையில் பங்கேற்றனா். தற்போது 15 நாள்களுக்கொரு முறை என மாற்றப்பட்டுள்ளதால், ஒரு துறையின் மருத்துவா்கள் வெகு நாள்களுக்குப் பின்னரே மீண்டும் வருகிறாா்கள். காரைக்காலில் சிறப்பு மருத்துவா்கள் இல்லாததால், ஜிப்மா் சிறப்பு முகாமை நாடவேண்டியுள்ளது. எனவே, மீண்டும் வாரந்தோறும் சிறப்பு மருத்துவ முகாமை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், காரைக்காலில் இயங்கிவரும் ஜிப்மா் கல்லூரியில் உடனடியாக புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவை தொடங்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com