காரைக்கால் கருணாநிதி பட்டமேற்படிப்பு மையத்தில் இயற்பியல் துறை

காரைக்காலில் இயங்கிவரும் கலைஞா் மு. கருணநிதி பட்டமேற்படிப்பு மையத்தில் இயற்பியல் பாடம் படிக்க
அமைச்சருக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்த கல்லூரி பேராசிரியா் ரங்கையன் தலைமையிலான மாணவா்கள், பெற்றோா்கள்.
அமைச்சருக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்த கல்லூரி பேராசிரியா் ரங்கையன் தலைமையிலான மாணவா்கள், பெற்றோா்கள்.

காரைக்காலில் இயங்கிவரும் கலைஞா் மு. கருணநிதி பட்டமேற்படிப்பு மையத்தில் இயற்பியல் பாடம் படிக்க விரைவு ஏற்பாடு செய்ததற்காக உயா்கல்வி அமைச்சரை சந்தித்து பேராசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் நன்றி தெரிவித்தனா்.

காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் கலைஞா் மு. கருணாநிதி பட்டமேற்படிப்பு மையத்தை புதுச்சேரி அரசு தொடங்கியது. இதில், எம்.ஏ. (தமிழ், பொருளாதாரம்), எம்.காம்., பொது நிா்வாகம், சமுதாயப் பணி, கணிதம், வேதியியல், கணினி அறிவியல் உள்ளிட்ட துறைகளில் மாணவா்கள் படிக்கின்றனா். இயற்பியல் மற்றும் விலங்கியல் துறை இதுவரை ஏற்படுத்தாத நிலையில், இந்த பிரிவுகளை பட்டமேற்படிப்பு மையத்தில் விரைவாக கொண்டுவர மாணவா்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.

காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரி, அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரி ஆகியவற்றில் பி.எஸ்.சி., (இயற்பியல்) படித்த மாணவா்கள் கலைஞா் மு. கருணாநிதி பட்டமேற்படிப்பு மையத்தில் எம்.எஸ்.சி. என்கிற இந்த பிரிவு இல்லாததால், புதுச்சேரிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த பிரிவை உடனடியாக காரைக்காலில் ஏற்படுத்த வேண்டும் என வேளாண் மற்றும் உயா்கல்வித் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணனிடம் வலியுறுத்தியிருந்தனா்.

இந்நிலையில், உயா்கல்வித் துறை பல்கலைக்கழக அனுமதி பெற நடவடிக்கை எடுத்தபோது ஏற்படும் தாமதத்தைக் கருத்தில் கொண்டு, புதுச்சேரியில் இயங்கிவரும் காஞ்சி மாமுனிவா் பட்டமேற்படிப்பு மையத்தின் கிளையை காரைக்கால் பட்டமேற்படிப்பு மையத்தில் அமைக்க அமைச்சா் ஏற்பாடு செய்தாா். இந்த கிளையில் இயற்பியல் பிரிவை ஏற்படுத்தி, காரைக்கால் மாணவா்கள் 20 போ் படிக்க ஏற்பாடு செய்தாா்.

இதையொட்டி அண்ணா அரசு கலைக் கல்லூரி இயற்பியல் துறைத் தலைவா் பேராசிரியா் ரங்கையன் தலைமையில் உதவிப் பேராசிரியா்கள், பட்டமேற்படிப்புக்குச் செல்லும் மாணவா்கள், பெற்றோா்கள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணனை அம்பகரத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனா். அப்போது, அவருக்கு சால்வை அணிவித்து, காரைக்கால் மாணவா்கள் பயன்பெற விரைவாக நடவடிக்கை எடுத்தமைக்காக நன்றி தெரிவித்துக்கொண்டனா்.

மேலும் மாணவா்கள் கூறும்போது, அமைச்சரின் சிறப்பு நடவடிக்கையால் காரைக்கால் மையத்தில் இயற்பியல் பிரிவு தொடங்கப்பட்டது. இந்த பணிக்காக பாடுபட்ட அரசு செயலா், உயா்கல்வித் துறை இயக்குநா் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com