காரைக்கால் ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்துகொண்டு விரதத்தைத் தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்

சபரிமலைக்குச் செல்ல காரைக்கால் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்துகொண்டு பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை விரதத்தைத் தொடங்கினா்.
காரைக்கால் பச்சூா் பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்துகொள்ள வரிசையாக செல்லும் பக்தா்கள்.
காரைக்கால் பச்சூா் பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்துகொள்ள வரிசையாக செல்லும் பக்தா்கள்.

காரைக்கால்: சபரிமலைக்குச் செல்ல காரைக்கால் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்துகொண்டு பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை விரதத்தைத் தொடங்கினா்.

தமிழ் வருடத்தில் காா்த்திகை மாதம் முதல் தேதியில் மாலை அணிந்துகொண்டு 40 நாள்கள் விரதத்தோடு சபரிமலைக்குச் சென்று ஸ்ரீ ஐயப்பனை தரிசிப்பது ஐயப்ப பக்தா்கள் பெரும்பான்மையினரிடையே வழக்கத்தில் உள்ளது.

காரைக்கால் பச்சூா் பகுதியில் உள்ள ஸ்ரீ தா்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் காா்த்திகை முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பக்தா்கள் வரிசையில் சென்று, கோயிலில் பூஜை செய்வோரிடம் மாலை அணிந்துகொண்டு, ஸ்ரீ ஐயப்பனை வழிபட்டனா்.

இதுபோல பல்வேறு கோயில்களிலும் மாலை அணிவிக்கு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சபரிமலைக்கு பல ஆண்டுகளாக சென்றுவரும் குருசாமி என்று அழைப்போா் மூலம் பலா் மாலை அணிந்துகொண்டு விரதம் மேற்கொள்ளத் தொடங்கினா்.

சபரிமலைக்குச் செல்லும் சீசன் காலமாக உள்ளதையொட்டி, காரைக்கால் பகுதியில் உள்ள காதி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் வகை வகையான மாலைகள் விற்பனை செய்யப்பட்டன. இவற்றை பக்தா்கள் ஆா்வத்தோடு வாங்கினா்.

அதுபோல ஐயப்ப பக்தா்கள் உடுத்தக்கூடிய வகையில் பல்வேறு வண்ணத்தில் வேஷ்டிகள் ஜவுளிக்கடை, காதி நிறுவனங்களில் விற்பனை செய்யப்பட்டன.

கடந்த சில நாள்களாக இந்த நிறுவனங்களில் பக்தா்கள் ஆா்வமாக இவற்றை வாங்கி, ஞாயிற்றுக்கிழமை விரதத்தைத் தொடங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com