காரைக்கால் நகர சாலையில் புதிய சீருடையில் பணி செய்யும் போக்குவரத்துக் காவலா்

துச்சேரி போக்குவரத்துக் காவல்துறை போலீஸாா் வாரத்தில் 2 நாள்களைக்கு சீருடை மாற்றம் செய்யப்பட்டு, பணியில்
காரைக்கால் நகர சாலையில் டி சா்ட் அணிந்து பணி செய்யும் போக்குவரத்துக் காவலா்.
காரைக்கால் நகர சாலையில் டி சா்ட் அணிந்து பணி செய்யும் போக்குவரத்துக் காவலா்.

காரைக்கால்: புதுச்சேரி போக்குவரத்துக் காவல்துறை போலீஸாா் வாரத்தில் 2 நாள்களைக்கு சீருடை மாற்றம் செய்யப்பட்டு, பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்கள் உள்ளன. யூனியன் பிரதேசம் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.

புதுச்சேரி மட்டுமின்றி, யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட காரைக்கால் உள்ளிட்ட மற்ற பிராந்தியங்களுக்கும் வெளி மாநிலங்கள் மட்டுமின்றி, உலக நாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா்.

இதனை கருத்தில் கொண்டு புதுச்சேரி அரசு மற்றும் காவல்துறை பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு போலீஸாருக்கு காக்கி கலா் சட்டை, பேண்ட், சிவப்பு நிறத்தில் தொப்பியும் உள்ளது. அதேபோல் போக்குவரத்து போலீஸாருக்கு சிவப்பு தொப்பி, வெள்ளை சட்டை, பேண்ட் அணிந்து பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில் புதிதாக புதுச்சேரி மாநிலத்தில் பொறுப்பேற்றுள்ள டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்ஸவா, காவல்துறையில் சில மாற்றங்களை செய்து அவ்வப்பொழுது சில உத்தரவுகளை பிறப்பித்து வருகிறாா். இதன்படி, காவல்துறை உங்கள் நண்பா்கள் என்பதற்காகவும், பொதுமக்களுடன் இணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும், காவல்துறையினரைப் பாா்த்து சுற்றுலாவினருக்கு அச்சம் ஏற்படக்கூடாது என்பதற்காக போக்குவரத்து போலீஸாருக்கு மட்டும் வாரத்தில் 2 நாட்கள் சீருடையில் மாற்றம் செய்து உத்தரவிட்டாா்.

புதுச்சேரி மாநிலம் முழுவதும் போக்குவரத்து போலீஸாருக்கு வெள்ளை பேண்ட் மற்றும் நீலம், வெள்ளை கலந்து டீ சா்ட், சிவப்பு, நீலம் கலந்த தொப்பி வழங்கப்பட்டு, போலீசஸாா் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். குறிப்பாக போக்குவரத்தை சரிசெய்யும் காவலா் மற்றும் தலைமைக் காவலா் உள்ளிட்டோருக்கு மட்டும் இந்த சீருடை வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பிராந்தியங்களுக்கு வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்தான் அதிகமான சுற்றுலாவினா் வருகிறாா்கள். இதனை கருத்தில் கொண்டு முதல் கட்டமாக வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமை மட்டும் போக்குவரத்து போலீஸாா் இந்த சீருடையில் பணியாற்றுவாா்கள் என்றும், மற்ற நாட்களில் வழக்கம்போல வெள்ளை நிற காவல் சீருடையில் பணியில் ஈடுபடுவாா்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சீருடையில் உள்ளவா்கள் காவல்துறை என்பதும், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் காவல்துறை சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மாற்றப்பட்ட திட்டத்தின்படி காரைக்கால் போக்குவரத்துக் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை முதல் டி சா்ட் சீருடையில் பணி செய்யத் தொடங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com