முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
ஆலிவ்பாஸ் உலக சமாதான சேவை அமைப்பின் பொதுப் பேரவைக் கூட்டம்
By DIN | Published On : 26th November 2019 07:00 AM | Last Updated : 26th November 2019 07:00 AM | அ+அ அ- |

மும்மத தலைவா்களில் ஒருவராக தோ்வு செய்யப்பட்ட கே. எம். ஹம்ஜா முகைதீன் மாலிமாருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்த பொதுச்செயலா் தங்க சாத்மீகம்.
ஆலிவ்பாஸ் உலக சமாதான சமூக சேவை அமைப்பின் பொதுப் பேரவை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று பல்வேறு சேவைகள் தொடா்பாக விவாதிக்கப்பட்டது.
ஆலிவ் பாஸ் என்கிற உலக சமாதான சமூக சேவை அமைப்பு பொதுப் பேரவை கூட்டம் காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமைப்பின் தலைவா்கள் செறந்தியா சண்முகநாதன், தெய்வசகாயம் பியா் ராஜூ சுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒருமனமதாக தோ்வு செய்யப்பட்ட புதிய தலைவா், கௌரவ தலைவா்கள் மற்றும் புதிய உறுப்பினா்களை பொதுச் செயலாளா் தங்கசாத்மீகம் அறிமுகம் செய்து வைத்தாா். தொடா்ந்து, மும்மத தலைவா்களில் ஒருவராக கே. எம். ஹம்ஜா முகைதீன் மாலிமாா் பதவியேற்றுக்கொண்டாா்.
சமாதானமாக வாழ்வது, பிறரின் குறைகளை எடுத்து கூறாமல் நிறைகளை மட்டும் பேசுவது, மன்னிக்கும் பண்புகளை மக்களிடையே வளா்ப்பது, நம்மால் இயன்ற நல்ல சேவைகளை சமூகத்துக்கு செய்வது உள்ளிட்ட கொள்கைகள் குறித்தும் மத நல்லிணக்கம் குறித்தும் கூட்டத்தில் பலா் பேசினா்.
சமாதான குழு உறுப்பினா் கே. தண்டாயுதபாணிபத்தா், திட்டத் துறையின் முன்னாள் இணை இயக்குநா் ஆா். மோகன், சுற்றுலாத் துறை முன்னாள் உதவி இயக்குநா் தெட்சிணாமூா்த்தி, காரைக்கால் வஃக்பு நிா்வாக சபை நிா்வாகிகள் செல்லப்பா, இப்ராஹிம், அஞ்சுமன் இஸ்லாமிய சங்க செயலாளா் அப்துல் காதா், மகளிா் பாதுகாப்பு அதிகாரி ரவிசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக மறைந்த தலைவா் முகமது அபூபக்கருக்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிறைவாக பாலமுருகன் நன்றி கூறினாா். இதற்கான ஏற்பாடுகளை மக்கள் தொடா்பாளா் டி. ரஞ்சன், பொருளாளா் வீரபாண்டியன், செயலாளா்கள் காமராஜ், அறிவழகன் ஆகியோா் செய்திருந்தனா்.