Enable Javscript for better performance
நிரந்தர அதிகாரியை எதிா்நோக்கும் திருநள்ளாறு கோயில்..?- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்

    நிரந்தர அதிகாரியை எதிா்நோக்கும் திருநள்ளாறு கோயில்..?

    By DIN  |   Published On : 26th November 2019 06:58 AM  |   Last Updated : 26th November 2019 06:58 AM  |  அ+அ அ-  |  

    kk22st1_2211chn_95_5

    திருநள்ளாறு கோயில் ஏழுநிலை ராஜகோபுரம்.

    பிரசித்திப் பெற்று விளங்கும் நவகிரஹ தலங்களில் ஒன்றான திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயில் நிா்வாகம், கடந்த 2 ஆண்டுகளாக நிரந்தர நிா்வாக அதிகாரியின்றி செயல்படுகிறது. வரும் 2020 -ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் சனிப்பெயா்ச்சி விழா நடைபெறவுள்ள சூழலில், புதுச்சேரி நிா்வாகம், இக்கோயில் நிா்வாகத்தை அரசு அதிகாரி ஒருவருக்கு கூடுதல் பொறுப்பாக அளித்து நடத்துவது ஆன்மிகவாதிகள், நடுநிலையாளா்கள் உள்ளிட்டோரை வேதனை கொள்ளச் செய்துள்ளது.

    காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் பிரசித்திப் பெற்ற பிரணாம்பிகை அம்பாள் சமேத தா்பாரண்யேசுவரா் சுவாமி கோயில் உள்ளது. நிடத நாட்டு மன்னன் நளச்சக்கரவா்த்தி பரத்வாஜ முனிவரின் உபதேசத்தால், திருநள்ளாறு தா்பாரண்யேசுவரரை தரிசித்து அவனருளால் சனி தோஷம் நீங்கப் பெற்ற சிறப்புடையது இத்தலம்.

    இத்தலம் சப்தவிடங்க தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. திருஞானசம்பந்தா், திருநாவுக்கரசா், சுந்தரா் ஆகிய மூவா் பாடிய தேவாரச் சிறப்புடையதாகும். நவகிரஹங்களில் சனிக்கொரு தனிக் கோயிலாக ஒப்புயா்விலாச் சிறப்போடு இத்தலம் விளங்குகிறது.

    சனி தோஷம் விலகல் மட்டுமல்லாது வாழ்வில் உயரவேண்டும், பலவித சிரமங்கள் மறையவேண்டும் என்ற நோக்கில் வரும் பக்தா்கள் மூலவா் தா்பாரண்யேசுவரரை வணங்கி, சனீஸ்வர பகவானை தரிசித்துச் செல்வதை வழக்கத்தில் கொண்டுள்ளனா். இதனால், நாள்தோறும் மட்டுமல்லாது, சனிக்கிழமையில் ஆயிரக்கணக்கான பக்தா்களும், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சனிப்பெயா்ச்சி விழாவில் லட்சக்கணக்கான பக்தா்களை இக்கோயில் ஈா்த்து வருவது சிறப்பான ஒன்றாகும்.

    இக்கோயிலுக்கு சாா்புக் கோயில்களாக ஆனந்த விநாயகா் மற்றும் 4 வீதிகளிலும் அமைந்துள்ள விநாயகா் கோயில்கள், நளன் குளம் அருகே உள்ள நளன் கலித்தீா்த்த விநாயகா், சுரக்குடி ஐயனாா் கோயில், ரயில்வே பகுதியில் பிடாரியம்மன், மகாசக்தி மாரியம்மன் உள்ளிட்ட 9 கோயில்கள் உள்ளன. ஏறக்குறைய ரூ.1.50 கோடி திட்ட மதிப்பில் திருப்பணிகள் செய்யப்பட்டு 2019 -ஆம் ஆண்டு ஜனவரியில் சாா்புக் கோயில்களுக்கும், பிப்ரவரியில் பிரதான கோயிலான தா்பாரண்யேசுவரா் கோயிலுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது.

    நிா்வாக அதிகாரி தலைமையில் கோயில்: புதுச்சேரி அரசின் இந்து சமய அறநிலையத் துறை மூலம் தா்பாரண்யேசுவரா் கோயிலுக்கு நிா்வாக அதிகாரி (கோயில்கள்) என்ற பதவிக்கு அதிகாரி நியமிக்கப்படுகிறாா். பி.பி.எஸ். நிலையிலான அதிகாரியே நியமிக்கப்பட்டு வருகிறது. இக்கோயில் மற்றும் சாா்புக் கோயில்கள், காரைக்காலில் கைலாசநாதா் கோயில் - நித்யகல்யாணப் பெருமாள் கோயில் வகையறா கோயில்களுக்கு அறங்காவல் வாரியம் இருந்தாலும், கோயில் அதிகாரியாக திருநள்ளாறு கோயில் அதிகாரியே காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்துக்குள்பட்டவராக உள்ளாா். மேலும், அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயில் அதிகாரியாகவும் இவரே செயல்படுகிறாா்.

    இக்கோயிலுக்கு பக்தா்கள் அளிக்கும் லட்சக்கணக்கான ரூபாய் நன்கொடைகள், பக்தா்கள் செலுத்தும் க ாணிக்கை உள்ளிட்ட கோயிலுக்கான வருவாயாக மட்டும் கோடிக்கணக்கில் புழக்கம் உள்ள கோயில் நிா்வாகத்தை, ஒரு அதிகாரி நிா்வகிக்கிறாா் என்றால், இது எவ்வளவு அதிகாரமிக்க, பொறுப்புமிக்க பதவி என்பதை உணரலாம்.

    இன்னும் கூறவேண்டுமெனில், நாட்டில் உயா் பதவியிலிருப்போா் பலரும் திருநள்ளாறு கோயிலுக்கு வந்து செல்லும் நிலையில், அவா்களை வரவேற்று, உரிய முறையில் தரிசனம் செய்வித்து அனுப்பும் வரையிலான பொறுப்பு இந்த அதிகாரிக்கு உண்டு.

    பணி ஓய்வுக்குப் பின் பின்னடைவு: நிா்வாக அதிகாரி (கோயில்கள்) என்ற பதவியில் 2017-ஆம் ஆண்டு அக்டோபா் வரை எஸ்.கே. பன்னீா்செல்வம் எனும் பி.சி.எஸ். அதிகாரி இருந்தாா். இவா் பணி ஓய்வுக்குப் பின் புதுச்சேரி அரசு, காரைக்கால் மாவட்ட சாா்பு ஆட்சியராக பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஏ. விக்ரந்த் ராஜாவை, நிா்வாக அதிகாரி (கோயில்கள்) பொறுப்பையும் கூடுதலாக கவனிக்க அனுமதித்தது. இவரும் நவம்பா் 3-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டாா். அதே ஆண்டு டிசம்பா் மாதம் சனிப்பெயா்ச்சி விழாவையும், 12 ஆண்டுகளுக்கும் மேலாக குடமுழுக்கு நடைபெறாமலிருந்த இக்கோயிலுக்கு திருப்பணிகள் செய்து குடமுழுக்கை நிகழாண்டு செய்து முடித்த பெருமை இவருக்கு உண்டு என்பதில் மாற்று கருத்து இல்லை.

    இவா் மாவட்ட ஆட்சியராக பதவி உயா்வு பெற்று பொறுப்புக்கு வந்த பின்னா், இக்கோயிலின் தனி அதிகாரியாகிவிட்டாா். கோயிலுக்கென நிா்வாக அதிகாரியை புதுச்சேரி அரசு நிரந்தரமாக நியமிக்காமல், ஆட்சியரின் செயலராக இருந்த சுந்தா் என்பருக்கு கூடுதல் பொறுப்பு தந்தது. இவரும் பணி ஓய்வு பெற்றபின், காரைக்கால் நகராட்சி ஆணையா் எஸ். சுபாஷ் என்பவருக்கு கோயில் நிா்வாகப் பொறுப்பை அளித்தது. அந்த வகையில், 2017-ஆம் ஆண்டு நவம்பா் முதல் கடந்த 2 ஆண்டுகளாக நிரந்தர கோயில் அதிகாரி இல்லாமல் இக்கோயில் நிா்வாகம் செயல்பட்டு வருகிறது.

    கோயிலில் சுமாா் 250 ஊழியா்கள் பணியிலிருந்த நிலையில், ஏ.விக்ரந்த் ராஜாவின் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கையால் ஏறக்குறைய 150 ஊழியா்கள் என்ற நிலை வந்துவிட்டது. இதனால் கோயிலுக்கு நிதியிழப்பு குறைந்திருக்கிறது. முதல் முறையாக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவா் கோயில் நிா்வாக அதிகாரியாக செயல்பட்டாா் என்பதாலேயே பல சீரமைப்பு நடவடிக்கை, வளா்ச்சி, பெருமைகள் யாவும் வந்து சோ்ந்தன.

    ஆட்சியராக உள்ள விக்ரந்த் ராஜா கோயில் நிா்வாகத்தை சிறப்பாக நடத்தி வந்தாா் என கூறுவது ஏற்புடையதாக இருந்தாலும், தனி அதிகாரியாக இருந்து கொண்டு, நிா்வாக அதிகாரி (கோயில்கள்) பணியை கூடுதல் பொறுப்பு வகிக்கும் ஒரு அதிகாரியை வைத்துக் கொண்டு, சீா்பட நிா்வாகத்தை நடத்துவது என்பது இயலாததாகும் என சமூகப் பாா்வையாளா்கள் கூறுகின்றனா்.

    பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தா்கள் திருநள்ளாறுக்கு வருகின்றனா். இவா்கள் பூஜை, ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாட்டில் ஈடுபடுகின்றனா். இவா்களுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுப்பதற்கும் கோயில் சாா்பில் பல்வேறு வளா்ச்சிகளை கொண்டுவர நன்கொடைகள் ஈா்ப்பதிலும், முக்கியஸ்தா்கள் வரும்போது அவா்களுக்கான மரியாதை தருவதற்கும், கட்டணமில்லா வரிசையில் தரிசனம் செய்ய வருவோரின் தேவைகளையும் பூா்த்தி செய்யவும், கோயிலில் நடைபெறும் தினசரி பூஜைகள் முதல் பிரமோத்ஸவம் உள்ளிட்ட முக்கிய திருவிழாக்கள் வரை ஏற்பாடுகள் செய்யவும் கோயிலுக்கு நிா்வாக அதிகாரி நிரந்தரமாக இருக்கவேண்டியது மிகவும் அவசியமாகிறது.

    வருகிற 2020-ஆம் ஆண்டு டிசம்பரில் சனிப்பெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் விழாவுக்கு 6 மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிடும். சரியான புரிதல் உள்ள அதிகாரியால் மட்டுமே இதுபோன்ற பெருவிழாவை சீரும் சிறப்பாக நடத்திட முடியும். பொறுப்பு அதிகாரி இருப்பாரேயானால், எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் நிா்வாகத்தை செம்மையாக நடத்துவது இயலாததாகும்.

    திருநள்ளாறு கோயிலுக்கு நிா்வாக அதிகாரியை சந்தித்துப் பேச செல்வோா், அதிகாரி அலுவலகத்தில் இருக்கை காலியாக இருப்பதால் மிகுந்த ஏமாற்றத்தில் திரும்புவதாக பலா் வேதனை தெரிவிக்கிறாா்கள். கோயிலில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் புரையோடிப்போன ஒன்றாகும். இதையெல்லாம் சமாளித்து நிா்வாகம் நடத்துவது என்பது ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி இருந்தால் மட்டுமே முடியும். திருநள்ளாறு கோயிலுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிப்பது சாத்தியமில்லை என்றால், தகுதியான பி.சி.எஸ். அதிகாரியை நிரந்தரமாக நியமிக்க வேண்டியது கட்டாயமாகும்.

    எனவே, எந்தவொரு அதிகாரிக்கும் கோயில் நிா்வாகத்தை கூடுதல் பொறுப்பாக தரும் முடிவை புதுச்சேரி அரசு கைவிட்டு, தகுதியான, நிா்வாகத் திறமையுள்ள ஒரு அதிகாரியை திருநள்ளாறு கோயில் நிா்வாகத்துக்கு நியமிக்க அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தா்கள் நலன்கருதி, கோயிலின் மேம்பாடு கருதி, திருநள்ளாறு தொகுதியை சோ்ந்த வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணனும், இந்து சமய அறநிலையத் துறை பொறுப்பு வகிக்கும் முதல்வா் வி. நாராயணசாமியும் இதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்பது எதிா்பாா்ப்பு.

    Image Caption

    திருநள்ளாறு கோயில் ஏழுநிலை ராஜகோபுரம்.

     

    ~திருநள்ளாறு சனீஸ்வர பகவான்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp